அருள்நிதியுடன் இணைந்து நடிக்கும் ஜீவா: ஜிப்சிக்கு அப்புறம் இது தான்
சென்னை: அருள்நிதியும் ஜீவாவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்த கதாபாத்திரம் என்றாலும் அதற்கு தேவையான நடிப்பை திறம்பட வழங்கக் கூடியவர் ஜீவா. இவர் தற்போது அருள்நிதியுடன் நடிக்க உள்ளார்.

பல நல்ல படங்களைத் தயாரித்த சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை தயாரிக்க உள்ளார். இயக்குனர் மற்றும் மற்ற நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அருள்நிதி அடுத்ததாக கரு.பழனியப்பன் இயக்கத்தில் 'புகழேந்தி என்னும் நான்' எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பரத் நீலகண்டன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
அதேபோல் ஜீவாவுக்கு, 'கீ' என்ற த்ரில்லர் படமும், 'கொரில்லா' என்ற நகைச்சுவை படமும் வெளியாக உள்ளன. ராஜுமுருகனின் ஜிப்சி திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











