ஜீவா பட நடிகர் லஷமன் நாராயணனுக்கு திருமணமாகியுள்ளது.
சென்னை : 2014ல் வெளிவந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ஜீவா. இந்த படத்தில் ரஞ்சித் என்ற கதாபாத்திரத்தில் லஷ்மன் நாரயணன் நடித்திருப்பார். மிகவும் எதார்த்தமாக நடித்து பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் லஷ்மன். ஜீவா படத்திற்கு முன்பாக 'இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான அன்னகொடி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தான் லஷ்மனுக்கு முதல் படம் .

விஷ்ணு விஷால் இயல்பாகவே ஒரு கிரிக்கெட் வீரர், அவர் ஜீவா படத்தில் நடித்தது பெரிய ஆச்சரியம் இல்லை, அவருக்கு இனணயாக லஷ்மனும் நடித்து அசத்தி இருப்பார். அவரது நடிப்பு அப்போது பலரால் பாராட்டப்பட்டது. 2014ல் பல மறக்க முடியாத வெற்றி படங்களை கண்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் மிக முக்கியமான அமைந்தது.
இப்படிப்பட்ட வெற்றிப்படத்தில் நடித்து நல்ல பெயர் எடுத்த லஷ்மனுக்கு ஏன் பட வாய்ப்பு வரவில்லை என்று தான் தெரியவில்லை. அவர் ஜீவா படத்திற்கு பின் வேறு எந்த படத்திலும் நடிக்க வில்லை என்பது சற்று வேதனையாக உள்ளது.
தற்போது லஷ்மனுக்கு சம்யுக்தா ராஜ்குமார் என்பவருடன் மதுரையில் திருமணமாகி உள்ளது. சம்யுக்தா கர்நாடக மாநிலத்தில் உள்ள நேரு இன்ஸ்டூட்டியூட்டில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். தற்போது தேனியில் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி எடுத்து வருகிறார். லக்ஷ்மன் நாரயணன் கார்மண்ட எக்ஸ்போர்ட் தொழிலை நல்ல கவனித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











