சுசீந்திரனின் ஜீவா படத்துக்கு யு சான்று... 26-ம் தேதி வெளியாகிறது
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜீவா படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்று அளித்துள்ளது.
‘முண்டாசுப்பட்டி' படத்தையடுத்து விஷ்ணு நடித்து வரும் படம் ‘ஜீவா'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இமான்
டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆர்யா - விஷால்
ஆர்யா மற்றும் விஷால் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகின்றனர். ஆர்யா தயாரிப்பாளர். விஷால் வெளியீட்டாளர்!

கிரிக்கெட்
கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் இது. படத்தில் நடித்துள்ள விஷ்ணுவோ நிஜமான கிரிக்கெட் வீரர்.

யு சான்று
இப்படத்தை தணிக்கை குழுவினருக்கு அனுப்பப்பட்டது. இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியது. இதையடுத்து படத்தை செப்டம்பர் 26-ம் தேதி வெளியிடவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











