சுசீந்திரனின் ‘ஜீவா’ படத்தில் நடிக்கும் ஆர்யா

By Mayura Akilan

பாண்டிய நாடு' படத்துக்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன் இயக்கி வரும் படம் 'வீர தீர சூரன்' என அறிவிக்கப்பட்டது. அந்தப் படம் தற்போது 'ஜீவா' என பெயர் மாறி உள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து ஜீவா படத்தை இயக்குகிறார் சுசீந்திரன். இதில் விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார்.

கிரிக்கெட் மோசடிகள்

கிரிக்கெட் மோசடிகள்

கிரிக்கெட்டில் உள்ள அரசியல், மோசடிகள், ஜாதி தலையீடுகள் பற்றியெல்லாம் படம் பேசப்போகிறதாம்.

சாதிக்கும் ஏழை இளைஞன்

சாதிக்கும் ஏழை இளைஞன்

கிரிக்கெட் மீது வெறிகொண்ட ஒரு ஏழை இளைஞன் எப்படி சர்வதேச லெவலில் சாதிக்கிறான் என்பதுதான் கதையாம். ஹீரோவாக விஷ்ணு நடிக்கிறார்.

கபடியில் இருந்து கிரிக்கெட்

கபடியில் இருந்து கிரிக்கெட்

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் கபடியை மையப்படுத்தி கதை அமைத்திருந்தார். அதிலும் விஷ்ணுதான் ஹீரோ. ஜீவா படத்தில் கிரிக்கெட் கதையாக அமைந்துள்ளது.

ஸ்ரீதிவ்யா - சுரபி

ஸ்ரீதிவ்யா - சுரபி

இதில் வருத்தப்படா வாலிபர் சங்கம் நாயகி ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக நடிக்கிறார்.இன்னொரு ஹீரோயினாக 'இவன் வேற மாதிரி' படத்தில் நடித்த சுரபி நடிக்கிறார்.

கெஸ்ட் ஆக வரும் ஆர்யா

கெஸ்ட் ஆக வரும் ஆர்யா

இவர்களுடன் தற்போது ஆர்யாவும் இணைந்துள்ளார். ஆர்யாவின் பிசியான ஷெட்யூலில் இப்படி வேற படத்தில் அதுவும் ஒரு காட்சியில் வந்து நடிப்பதென்பது நல்ல விஷயம்தான். இதனால்தான் அனைத்து தயாரிப்பாளர்களும் ஆர்யாவை புகழ்கின்றனர்.

ஆர்யாவின் நடிப்பு

ஆர்யாவின் நடிப்பு

ஆர்யா ஏற்கனவே ஜீவா நடித்த படமான சிவா மனசுல சக்தி, உதயநிதியின் ஒருகல் ஒரு கண்ணாடி, ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார்.

இது பெஸ்ட் படம்

இது பெஸ்ட் படம்

ஜீவா படம் பற்றி டுவிட்டரில் கருத்திட்டுள்ள ஹீரோ விஷ்ணு, இது தனக்கும்,சுசீந்திரனுக்கும் சிறந்த படமாக அமையும் என்று கூறியுள்ளார். முண்டாசுப்பட்டி வெற்றிக்குப் பின்னர் விஷ்ணு நடிக்கும் படம் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X