»   »  சிம்பன்சி குரங்குடன் நடிக்கும் ஜீவா... ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் 'கொரில்லா'!

சிம்பன்சி குரங்குடன் நடிக்கும் ஜீவா... ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் 'கொரில்லா'!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிம்பன்சி குரங்குடன் நடிக்கும் ஜீவா... ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் 'கொரில்லா'!

சென்னை : நடிகர் ஜீவா நடிக்கும் 29-வது படத்திற்கு 'கொரில்லா' என பெயரிட்டுள்ளனர். ஜீவா ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நடிக்கிறார்.

'மகாபலிபுரம்' படத்தை இயக்கிய டான் சாண்டி 'கொரில்லா' படத்தை இயக்குகிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார்.

காமெடி ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் ஜீவாவுடன், சிம்பன்சி குரங்கு ஒன்றும் முக்கிய ரோலில் நடிக்கிறது.

ஜீவா - ஷாலினி பாண்டே

ஜீவா - ஷாலினி பாண்டே

ஜீவா மற்றும் ஷாலினி பாண்டே நடிக்கும் இந்தப் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜீவாவின் 29-வது படத்துக்கு 'கொரில்லா' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரில்லா

கொரில்லா

இந்தியாவிலேயே முதல்முறையாக பயிற்சியளிக்கப்பட்ட சிம்பன்சி குரங்கு ஒன்று இந்தப் படத்தில் நடிக்கிறது. இதற்காக தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற 'சாமுட்' விலங்குகள் பயிற்சி மையத்தில் இருந்து சிம்பன்சி வர வழைக்கப்பட இருக்கிறது.

ஜனவரியில் ஷூட்டிங்

ஜனவரியில் ஷூட்டிங்

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றவிருக்கிறார். வரும் ஜனவரி மாதம் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆர்.ஜே.பாலாஜி - யோகி பாபு

ஆர்.ஜே.பாலாஜி - யோகி பாபு

'கொரில்லா' படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு ஆகிய இருவரும் காமெடியன்களாக நடிக்கின்றனர். யோகி பாபு நடிக்கும் வேடத்தில் முன்பு சதீஷை ஒப்பந்தம் செய்ய இருந்த நிலையில், அவருக்கு பதிலாக யோகி பாபுவை கமிட் செய்துள்ளனர்.

கொரில்லா படத்தின் கதை

கொரில்லா படத்தின் கதை


சிம்பன்சிகள் பெரும்பாலும் அறிவுக் கூர்மையுள்ளவை. அவை எப்போதும் புன்னகையுடன் ஏதாவது குறும்பு செய்துகொண்டிருக்கும். சிம்பன்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவரக்கூடியவை. இதை அடிப்படையாக வைத்துத்தான் படத்தின் கதை உருவானது எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் டான் சாண்டி.

English summary
Actor Jeeva's 29th film is titled 'Gorilla' directed by don Sandy. Shalini Pandey is the heroine of 'Gorilla' movie. 'Gorilla' movie Coming as a comedy action thriller, Jeeva plays with a chimpanzee monkey in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X