உலகக் கோப்பையை வென்ற கதை.. ரன்வீர் சிங்கின் '83' ரிலீஸ் எப்போது? பாலிவுட்டில் புது தகவல்!

By

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை கைப்பற்றியதை மையமாக வைத்து உருவாகியுள்ள '83' படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு, முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.

இதை மையமாக வைத்து '83' என்ற பெயரில் திரைப்படம் உருவாகி உள்ளது.

கபில்தேவ் கேரக்டர்

கபில்தேவ் கேரக்டர்


கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில்தேவ் கேரக்டரில் நடிக்கிறார். மதன்லாலாக ஹர்டி சாந்து, கபில்தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கின்றனர். சுனில் கவாஸ்கராக, தஹிர் ராஜ் பாசின், சையது கிர்மானியாக சஹில் கட்டார் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஶ்ரீகாந்தாக ஜீவா

ஶ்ரீகாந்தாக ஜீவா

தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தாக, ஜீவா நடித்துள்ளார். இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகி உள்ளது. படத்தை விஷ்ணுவர்தன் இந்துரியின் விப்ரி மீடியா, அனுராக் காஷ்யப்பின் பான்டோம் பிலிம்ஸ், ரிலையன்ஸ், நதியத்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட், நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

வெளியாகவில்லை

வெளியாகவில்லை

இந்தப் படத்தின் ரிலீஸ், கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப் போனது. இந்த படத்தை OTT-யில் வெளியிட இருப்பதாகவும் செய்தி வெளியானது. ரூ.143 கோடிக்கு ஓடிடி நிறுவனம் ஒன்று படத்துக்கு விலை பேசியதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், அந்த செய்தியில் உண்மை இல்லை. இந்தப் படத்தை பெரிய திரைக்காகவே தயாரித்திருக்கிறோம் என்று படக்குழு கூறியிருந்தது.

ஜூனில் ரிலீஸ்

ஜூனில் ரிலீஸ்

இந்நிலையில், இந்தப் படத்தை ஜூன் மாதம் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. 83 உலகக் கோப்பையை வென்ற நாளான ஜூன் 25 ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றும் அதற்கு முன்பாகவே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X