ரத்னசிவா எந்த ஹீரோக்கும் கதை சொல்லி ஓகே பன்னுவார் என்றார் ஜீவா

சென்னை : நடிகர் ஜீவா நடிப்பில் ரத்னசிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் சீறு .இந்த படத்தை ஐசரிகணேஷ் தயாரித்து இருக்கிறார் .இந்த படத்தில் ஜீவா ,ரியா சுமன் ,வருன் ,நவ்தீப் ,காயத்ரி கிருஷ்னா மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர் .

இந்த படம் டிசம்பர் வெளியாவதாக முன்னர் அறிவிக்கபட்டு இருந்தது .சில காரணங்களுக்காக தள்ளி வைக்கபட்டு தற்போது பிப்ரவரி 7 ரீலிஸாக உள்ளது .இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது .இதில் பேசிய ஜீவா சில படங்களில் வந்து பத்திரிகையாளர்களின் முன்னிலையில் உட்காரும் போது சின்ன தடுமாற்றம் இருக்கும் படம் சரியாக வரவில்லை என்ன செய்வது என்ற பதட்டமும் அதனுடன் இருக்கும் .ஆனால் சீறு படத்தை பொருத்த வரையில் தோல்வி பற்றிய பயமே இல்லை படம் சிறப்பாக வந்திருக்கிறது என நம்பிக்கை தெரிவித்தார்.

jeeva speech in press meet of seeru movie

ஜீவாவின் கடந்த படங்களின் நிலையை பற்றி ஜீவா தற்போது வெளிப்படையாக பேசியிருப்பதும் சீறு படத்தை பற்றி மிகவும் சரியான அளவில் பேசியிருப்பதும் பாராட்டை பெற்றிருக்கிறது .
சீறு படத்தை இயக்குனர் ரத்னசிவா இயக்கி இருக்கிறார் .இவர் றெக்க படத்தை இயக்கிய இயக்குனர் .இவர் கதை சொல்லும் விதம் நடிகர்களை எழுதில் கவர்ந்து விடும் எந்த நடிகராக இருந்தாலும் இவர் கதை சொல்லும் விதத்தில் ஒகே சொல்லி விடுவார்களாம் அந்த அளவுக்கு நேர்த்தியான கதை சொல்பவர் ரத்ன சிவா என விழாவின் போது ஜீவா புகழ்ந்தார்.

jeeva speech in press meet of seeru movie
மேலும் ஜீவா ஜிப்ஸி படத்திற்காக பல வட இந்திய மாநிலங்களுக்கு நடிக்க சென்றிருக்கும் போது அங்குள்ள மக்கள் தமிழ் சினிமாவை பார்கிறார்கள் ரசிக்கிறார்கள் என தெரிந்து கொண்டாராம் .மேலும் இந்திய சினிமாவிலே டப்பிங்கை சிறப்பாக செய்யும் ஒரே சினிமாத்துறை தமிழ் சினிமா தான் என பாராட்டி கூறினார் .
jeeva speech in press meet of seeru movie
சீறு படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் டி.இம்மான் .ஜீவா மற்றும் டி.இம்மான் இதுவரையில் இரண்டு படங்களில் இனைந்து பணியாற்றியுள்ளனர் .இவர்கள் இனையும் மூன்றாவது படம் இதுவாகும் .
jeeva speech in press meet of seeru movie
ஜீவா 83 படத்தில் நடிக்கும் போது நடிகர் ரன்வீர் சிங் இடைவெளி நேரங்களில் அவர்களுடன் நடிக்கும் நடிகர்களை பற்றி தெரிந்து கொள்ள அவர்கள் நடித்து வந்த படங்கள் ,பாடல்கள் என கிடைப்பதை பார்பாராம் ,அப்படி ஜீவாவை பற்றி தெரிந்து கொள்ள அவரின் பாடல்களை பார்த்த ரன்வீர் சிங் கச்சேரி ஆர்ம்பம் பாடலை பார்த்து வியந்து போனாராம்.அதற்காக 83 படத்தின் முதல்பார்வை வெளியீடு சென்னையில் நடந்த போது அந்த விழாவில் கச்சேரி ஆர்ம்பம் பாடலை இசைக்க சொல்லி தான் ரன்வீரும் ஜீவாவும் ஆடினார்களாம் .

சீறு படத்தின் மற்றொரு சிறப்பம்சம் முதல்முறையாக தமிழில் நவ்தீப் வில்லனாக அறிமுகமாகிறார் அதையடுத்து வளர்ந்து வரும் நடிகர் வருனும் இதில் மற்றொரு வில்லனாக நடித்து இருக்கிறார் .இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறது இதனால் படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது .சீறு படம் வரும் பிப்ரவரி 7 வெளியாகும் என படக்குழு உறுதியளித்து இருக்கிறது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X