ஜீவா அருள்நிதியின் களத்தில் சந்திப்போம் - பர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்த தனுஷ்

சென்னை: ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 90வது படைப்பான களத்தில் சந்திப்போம் என்ற படத்தில் கதாநாயகர்களாக ஜீவாவும் அருள் நிதியும் இணைந்து நடிக்க என்.ராஜ சேகர் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் நேற்று வெளியிட்டுள்ளார்.

1990ஆம் ஆண்டு புது வசந்தம் படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் கால் பதித்தது ஆர்.பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் பல வெற்றி படங்களை தயாரித்ததுடன் இன்று முன்னணியிலுள்ள பல நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.

 Jeeva with Arulnithis Kalathil santhippom first look poster releases

இந்நிறுவனம் கடைசியாக 2017ஆம் ஆண்டு கடம்பன் என்ற படத்தை தயாரித்தது. அதன் பின்பு சிறிது இடைவெளி விட்டு தற்போது மீண்டும் படத் தயாரிப்பில் நுழைந்துள்ளது. இதையடுத்து தங்களுடைய 90வது படமாக மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் தான் களத்தில் சந்திப்போம்.

ஜீவா, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் .முதன் முறையாக இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவனி சங்கர் நடிக்க காரைக்குடி செட்டியாராக அப்பச்சி என்ற வித்தியாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார்.

இவர்களுடன் ரோபோ சங்கர், பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்

கதை, திரைக்கதை மற்றும் எழுதி இயக்குவது என்.ராஜசேகர். இப்படத்திற்கு வசனம் எழுதியது ஆர்.அசோக், பாடல்கள் கவிஞர் பா.விஜய், இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. சண்டைப் பயிற்சி பிரதீப். இவர் பிரபல சண்டைப் பயிற்சியாளரான தளபதி தினேஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நடன இயக்குநர் ராஜு சுந்தரம் மற்றும் ஒளிப்பதிவு அபிநந்தன் ராமானுஜம், படத் தொகுப்பு தினேஷ் பொன்ராஜ்

களத்தில் சந்திப்போம் படம் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி கம் ஆக்சன் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது. நட்பு, காதல், நகைச்சுவை ,அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது.

தற்போது ப்ரோ கபடி போட்டி பிரபலமடைந்து வருவதால் அதை மையமாக வைத்தே கதை தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் நேற்று வெளியிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்காசி, காரைக்குடி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X