ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடிக்கும் 'ஜெயிக்கிற குதிர'- இன்று பூஜையுடன் ஆரம்பம்

By Shankar

சென்னை: ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடிக்கும் புதிய படத்துக்கு ஜெயிக்கிற குதிர என்று தலைப்பிட்டுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவன் மீண்டும் நடிக்க வந்துள்ளார் இந்தப் படம் மூலம்.

பிங்கி புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் பியாரிலால் குந்தேச்சா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

ஷக்தி சிதம்பரம்

ஷக்தி சிதம்பரம்

லொள்ளு, நக்கல், நையாண்டி காமெடிகளுக்கு பேர் பெற்றவர் ஷக்தி சிதம்பரம் இவரும் சத்தியராஜும் இணைந்து பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளனர். அத்துடன் பிரபு, பிரபுதேவா, பார்த்திபன், சுந்தர்.சி, சிபிராஜ், லாரன்ஸ், கருணாஸ் என நிறைய நடிகர்களை வைத்து பல படங்களை எடுத்த அனுபவசாலி இவர்.

ஜீவன்

ஜீவன்

ஜெயிக்கிற குதிர படத்தில் கதாநாயகனாக ஜீவன் நடிக்கிறார். சில வருட இடைவெளிக்கு பிறகு ஜீவன் நடிக்கும் படம் இது. 2009-ல் நான் அவனில்லை 2-க்குப் பிறகு ஜீவன் நடித்த படம் கிருஷ்ண லீலை. அந்தப் படம் வெளியாகவே இல்லை.

மூன்று நாயகிகள்

மூன்று நாயகிகள்

கதாநாயகிகளாக மூன்று பேர்... டிம்பிள் சோப்டே, அம்பிகா சோனி, திராவியா நடிக்கிறார்கள். சரண்யா, ஜெயபிரகாஷ், கருணாகரன், தம்பிராமையா, ஜி.ஆர், கோவைசரளா, சிங்கம்புலி, மனோபாலா, மயில்சாமி, இமான்அண்ணாச்சி, மதுமிதா, சித்ராலட்சுமணன் இவர்களுடன் பவர்ஸ்டார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பூஜை

பூஜை

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வைரமுத்து, மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகின்றனர்.

இந்தப் படத்தின் பூஜை இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. திரையுலகப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று படக்குழுவினரை வாழ்த்தினர்.

ஆறே வார்த்தைகள்

ஆறே வார்த்தைகள்

படம் குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறுகையில், "முடியாது என்பது முட்டாள்தனம். முடியும் என்பது மூலதனம் என்கிற ஆறு வார்த்தைகள்தான் கதைக் களம்!

அறுபதே நாட்கள்

அறுபதே நாட்கள்

இதை வைத்து காமெடி, காதல்,கலாட்டா படமாக உருவாகிறது. 21ந் தேதி படப்பிடிப்புடன் துவக்க விழா நடைபெற்று தொடர்ந்து அறுபது நாட்களில் படப்பிடிப்பு முடிவடைகிறது. சென்னை, பாண்டி, மும்பை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X