நீண்ட இடைவெளிக்கு பின் தமிழுக்கு வரும் மல்லிகா ஷெராவத்.. ஜீவனின் 'பாம்பாட்டம்' படத்தில் இளவரசியாமே!

By

சென்னை: ஜீவன் இரட்டை வேடத்தில் நடிக்கும் பாம்பாட்டம் படம் ஐந்து மொழிகளில் தயாராகிறது என்று படக்குழு கூறியுள்ளது.

Recommended Video

Pambattam Movie Pooja | Jeevan, Yashika Anand, Director V.C.Vadivudaiyan

காக்க காக்க, திருட்டுப் பயலே, நான் அவனில்லை, மச்சக்காரன், தோட்டா உட்பட சில படங்களில் நடித்தவர் ஜீவன்.

இவர் அடுத்து நடிக்கும் படத்துக்கு, பாம்பாட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மல்லிகா ஷெராவத்

மல்லிகா ஷெராவத்

கதாநாயகிகளாக டகால்டி படத்தில் நடித்த ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் நடிக்கிறார்கள். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி என்ற கேரக்டரில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். இதற்கு முன் தமிழில் கமலின் தசாவதாரம் படத்தில் நடித்திருந்த மல்லிகா, பிறகு சிம்புவின் ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

ஃபிலிம் கார்டன்

ஃபிலிம் கார்டன்

பாம்பாட்டம் படத்தை தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரிக்கிறார்.

அம்ரேஷ் இசை

அம்ரேஷ் இசை

ஆசிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரேஷ் இசை அமைக்கிறார். பா.விஜய், யுகபாரதி, விவேகா பாடல்கள் எழுதுகின்றனர். 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதையாம் இது.

வரலாற்றுக் கதை

வரலாற்றுக் கதை

கிராபிக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படம் பற்றி இயக்குனர் வடிவுடையான் கூறும்போது, 'வரலாற்றுக் கதையை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து உருவாக்குகிறேன். மிகப்பெரிய கிராபிக்ஸ் நிறுவனம் ஒன்று இதன் கிராபிக்ஸ் காட்சிகளை மிக பிரமாண்டமாக செய்து வருகிறார்கள்.

முக்கிய காட்சிகள்

முக்கிய காட்சிகள்

மும்பையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளோம். படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், மும்பை போன்ற இடங்களில் 120 நாட்கள் நடைபெற இருக்கிறது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாக படம் இருக்கும் என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X