குடும்ப கதையாம்ல.. தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல நட்சத்திர ஜோடியின் மகள்!

By

சென்னை: பிரபல நட்சத்திர தம்பதியின் மகள், தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

எண்பதுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை ஜீவிதா.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வந்தார்.

கடமை கண்ணியம்

கடமை கண்ணியம்

தமிழில், தப்புக் கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, தர்மபத்தினி, இளமை, நானே ராஜா நானே மந்திரி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர், 'இதுதான்டா போலீஸ்' ராஜசேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷிவானி, ஷிவாத்மிகா ஆகிய மகள்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

கடந்த சில வருடங்களுக்கு முன் ஷிவானியை, தமிழ், தெலுங்கில் அறிமுகப்படுத்த ஜீவிதாவும் ராஜசேகரும் முடிவு செய்தனர். இந்தியில் ஹிட்டான 2 ஸ்டேட்ஸ் படத்தின் ரீமேக்கில் நடிக்க வைக்க முடிவு செய்தனர். ஷூட்டிங் தொடங்கிய நிலையில் இயக்குனரும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, படம் நின்றுவிட்டது.

சேரன், கவுதம் கார்த்திக்

சேரன், கவுதம் கார்த்திக்

இதற்கிடையே, அவர் தங்கை ஷிவாத்மிகா, தோராசானி என்ற படம் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்நிலையில் அவர் தமிழிலும் இப்போது அறிமுகமாகிறார். இயக்குனர் நந்தா பெரியசாமி, அடுத்து சேரன், கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதில் ஷிவாத்மிகா ஹீரோயினாக நடிக்கிறார்.

குடும்ப உறவு

குடும்ப உறவு

இந்தப் படத்தை பி.ரங்கநாதனின் ஸ்ரீ வாரி ஃபில்ம்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் யோகிபாபு எமதர்மனாக நடித்த, தர்மபிரபு படத்தை ஏற்கனவே தயாரித்து இருந்தது. குடும்ப உறவுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் விதமாக இந்தப் படம் உருவாகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

டேனியல் பாலாஜி

டேனியல் பாலாஜி

இந்தப் படத்தில், டேனியல் பாலாஜி, சரவணன், கிழக்கு சீமையிலே விக்னேஷ், சிங்கம் புலி உட்பட பலர் நடிக்கின்றனர். பாலபரணி ஒளிப்பதிவு செய்கிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு இசை அமைத்த சித்துகுமார் இசை அமைக்கிறார். கவிஞர் சினேகன் பாடல்கள் எழுதுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X