எப்படி வந்தது ரூ 450 கோடி சொத்து? - ஜெகனுக்கு நடிகை ஜீவிதா கேள்வி

By Shankar

Jeevitha and Rajasekhar
கடப்பா: ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ 450 கோடிக்கு சொத்துக்கள் எப்படி வந்தன? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகையும் ராஜசேகரின் மனைவியுமான ஜீ்விதா.

தெலுங்கு தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தில் இருந்த நடிகர் ராஜசேகர் நடிகை ஜீவிதா தம்பதி சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசில் சேர்ந்தனர். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ராஜசேகர ரெட்டிக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார்.

பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகியதும் அவரது அணியில் இருந்தனர். அவர் நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இருவரும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் இருந்து விலகப் போவதாக திடீரென அறிவித்தனர்.

நடிகர் ராஜசேகர் ஜீவிதா இருவரும் தெலுங்குதேசம் கட்சியில் சேர திட்டமிட்டிருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் ராஜசேகர் ஜீவிதா இருவரும் ஐதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அவர்கள் கூறுகையில், "ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் எங்களுக்கு உரிய மரியாதை இல்லை. எங்களை ஓரங்கட்ட முயற்சி நடக்கிறது. இதனால் நாங்கள் இருவரும் அக்கட்சியில் இருந்து விலகுகிறோம். விரைவில் நாங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வேறு கட்சியில் சேருவது பற்றி முடிவு எடுப்போம்.

ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 4 ஆண்டுகளுக்குள் ரூ.450 கோடி அளவுக்கு சொத்து குவித்துள்ளார். இவ்வளவு சொத்துக்களை குறுகிய காலத்தில் எப்படிக் குவித்தார்? இதற்கு அவரால் சரியான விளக்கம் அளிக்க முடியுமா? இதற்கு விசாரணை அவசியம்," என்றனர்.

தங்களது அரசியல் எதிரியான சிரஞ்சீவி காங்கிரஸில் இணைவதால், ராஜசேகரும் ஜீவிதாவும் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X