நடிகை ஜீவிதா வீட்டில் சாமி சிலைகள், பணம் திருட்டு

தெலுங்கு நடிகர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதியினர் ஹைதராபாத் பிரகாசன் நகரில் வசித்து வருகின்றனர். அவர்களது வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு நாகராஜ் என்பவர் வீட்டு வேலைக்காக சேர்ந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகராஜை வீட்டுக்கு காவல் வைத்து விட்டு ஜீவிதாவும், ராஜசேகரும் ஷூட்டிங் போய் விட்டனர். நேற்றுதான் வீடு திரும்பினர். அப்போது நாகராஜ் வீட்டில் இல்லை. வீடு திறந்து கிடந்தது.
பதறியடித்து உள்ளே சென்ற ஜீவிதாவும், ராஜசேகரும்போய்ப் பார்த்தபோது, வீட்டின் பூஜை அறையில் இருந்த தங்கம், வெள்ளியால் ஆன சாமி சிலைகள், பர்சில் வைத்திருந்த ரூ. 15,000 பணம் ஆகியவை காணாமல் போயிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர்.
சிலைகளின் மதிப்பு ரூ. 7 லட்சமாகும். இதையடுத்து ஜூப்ளி ஹில்ஸ் போலீஸில் வேலைக்காரர் நாகராஜு மீது புகார் கொடுத்துள்ளனர்.
Comments
actor rajasekhar actress jeevitha சாமி சிலைகள் திருட்டு நடிகர் ராஜசேகர் நடிகை ஜீவிதா ஹைதராபாத் வீடு hyderabad house idols


Click it and Unblock the Notifications