நடிகர், டாக்டர் ராஜசேகர் உடல்நிலை.. தயவு செய்து வதந்தி பரப்பாதீங்க.. நடிகை ஜீவீதா வேண்டுகோள்!
சென்னை: தனது கணவர் உடல்நிலைபற்றி தயவு செய்து வதந்தி பரப்ப வேண்டாம் என்று நடிகை ஜீவிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அவர்கள் மகள்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

தொடர்ந்து சிகிச்சை
மகள்கள் ஷிவானி, ஷிவாத்மிகா குணமான நிலையில், டாக்டர் ராஜசேகரும் ஜீவிதாவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை டாக்டர் ராஜசேகர், ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருந்தார். 'மகள்கள் குணமடைந்துவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் இப்போது நன்றாக இருக்கிறோம். விரைவில் திரும்புவோம்' என்று கூறி இருந்தார்.

பிரார்த்திக்க வேண்டும்
நடிகை ஜீவிதா குணமானதை அடுத்து வீட்டுக்குத் திரும்பினார். இந்நிலையில் அவர்கள் மகள் ஷிவாத்மிகா, கொரோனாவுடன் அப்பா போராடி வருவதாகவும் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பீதி வேண்டாம்
இதையடுத்து அவர் உடல் நிலை பற்றி வதந்தி பரவியது. பின்னர் மற்றொரு ட்விட்டில், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. நன்றாக இருக்கிறார். உங்கள் பிரார்த்தனைகள் தேவை. பீதியடைய வேண்டாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறி இருந்தார்.

தொடர் கண்காணிப்பு
மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் உடல் நிலைப் பற்றி சமூக வலைதளங்களில் மீண்டும் வதந்தி பரவியது. இதையடுத்து நடிகை ஜீவிதா, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடவுளிடம் வேண்டுதல்
அதில், ராஜசேகர் இப்போது நன்றாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் மோசமான நிலையில் அவர் இருந்தார். கடவுளிடம் வேண்டினோம். இப்போது அவரால் நன்றாக சுவாசிக்க முடிகிறது. அவர் விரைவில் வீட்டுக்குத் திரும்புவார் என்று நம்புகிறோம். ஆதாரமில்லாத செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











