பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்!

கொச்சி : அடுத்த வாரம் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

மலையாளத்தில் அறிமுகமான சில வருடங்களிலேயே ஹிட் படங்களை கொடுத்து முன்னணி பட்டியலில் முன்னேறி வருகிறார்.

தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் ஐஸ்வர்யா கேரளா சேலையில் பார்க்க ரம்மியமாக இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளதை பார்த்து பாராட்டிய பிரபல நடிகை ஒருவரிடம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டுள்ளார்.

ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்பொழுது தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகையாக மாறியுள்ளார். ஆம்பள படத்திற்கு பிறகு சுந்தர் சி விஷால் இணைந்த ஆக்சன் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி இப்பொழுது தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் நடித்துள்ளார்.

தரமான கதாபாத்திரம்

தரமான கதாபாத்திரம்

மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இந்த படம் திரையில் வெளியாகும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கையில் தயாரிப்பாளரின் அதிரடி முடிவால் இந்த படம் நேரடியாக இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. லண்டனில் பெரும்பான்மையான காட்சிகள் படம் பிடிக்கப்பட்ட ஜகமே தந்திரம் செம ஸ்டைலிஷாக உருவாகி இருக்க இதில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு தரமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தனி இடத்தை பிடிப்பார்

தனி இடத்தை பிடிப்பார்

ஜகமே தந்திரம் தொடர்ந்து மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனிலும் இணைந்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி மேலும் ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மலையாளத்தை போலவே தமிழிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

திருமணம் செய்து கொள்ளலாமா

திருமணம் செய்து கொள்ளலாமா

கேரளாவின் அழகை போலவே கேரளா சேலைக்கும் வர்ணிக்க முடியாத ஒரு பேரழகு இருக்க கேரளா சேலையை எந்த பெண்கள் அணிந்தாலும் அவர்களை அடித்துக்கொள்ள முடியாது அந்த அளவிற்கு அழகாக இருப்பார்கள் . அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கேரளா சேலையில் அம்சமாக எடுத்த புகைப்படங்களை பார்த்த நடிகை ஸ்ரதா ஸ்ரீநாத் புகழ்ந்துள்ளார். அதனைப் பார்த்த ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டுள்ளது ரசிகர்களுக்கு தூக்கிவாரிப் போட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X