ஜென்ம நட்சத்திரம் வெற்றிக்கு காரணம் பேய்.. போட்ட பணத்தை எடுத்துவிட்டோம்.. நாயகன் பேச்சு!

சென்னை: ஒரு நொடி படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணி வர்மன் ஜென்ம நட்சத்திரம் படத்தை இயக்கி உள்ளார். ஒரு நொடி படத்தில் ஹீரோவாக நடித்த தமன் அக்ஷன் இப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். மல்வி மல்ஹோத்ரா, காளி வெங்கட், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் சென்னையில் இன்று படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

ஜென்ம நட்சத்திரம் படத்தின் கதையில் ஹீரோயினுக்கு அமானுஷ்யமான விஷயங்கள் கவனில் வருகிறது. ஹீரோவிற்கு சினிமாவில் நல்ல இயக்குனராக வேண்டும், தனது முதல் படத்தை தான் நினைத்தது போல் எடுக்க வேண்டும் என வாய்ப்பு தேடி வருகிறார். இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம், அரசியல்வாதியிடம் வேலை செய்யும் காளி வெங்கட் அரசியல்வாதியின் கருப்பு பணத்தை கடத்தி விடுகிறான். இதை தெரிந்து கொண்ட அரசியல்வாதியின் ஆட்களால் காளி வெங்கட்டை கொன்று விடுகின்றனர். இறக்கும் முன்பு கடத்திய பணத்தை தான் புதுசேரி செல்லும் வழியில் ஒரு பழைய கட்டிடத்தில் மறைத்து வைத்துள்ளதாக ஹீரோ மற்றும் நண்பர்களிடம் சொல்லி விட்டு இறந்து விடுகிறார்.

Thanks Meet actor
Photo Credit:

கை கொடுத்த பேய்: ஹீரோவும் நண்பர்களும் அந்த பழைய கட்டடத்திற்கு செல்கிறார்கள். ஆனால், அந்த பங்களாவில் இருக்கும் தீய சக்தி பல வேண்டாத வேலைகளை செய்கிறது. இதில் ஒருவர் ஒருவராக பலியாகின்றனர். கடைசியில் அந்த பணம் ஹீரோ கையில் கிடைத்ததா இல்லை என்பது தான் படத்தின் கதை. கடந்த வாரம் தியேட்டரில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இன்று படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில் பேசிய படத்தின் நாயகன் தமன் அக்ஷன், நான் பல படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால், முதன் முறையாக சக்சஸ் மீட் நடப்பது இந்த படத்திற்கு தான். ஒரு நொடி படத்திற்கு பிறகு பேய் படம் எடுக்கலாம் என்று யோசித்து பேய் படம் எடுத்தோம். கடைசியில் எங்களுக்கு பேய் கை கொடுத்து இருக்கிறது.

நன்றி: ஒரு நொடி திரைப்படம் சிறிய பட்ஜெட் படம், அந்த படத்தில் போட்ட பணத்தை எடுத்துவிட்டோம். ஆனால், இந்த படத்தில் போட்ட காசை நாளில் எடுத்து விட்டோம் இது எங்களை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறோம். இந்த படத்தை மக்களுக்கு தெரியப்படுத்திய நீங்கள், ஒரு நொடி படத்திற்கும் உங்களின் ஆதரவு இருந்தது அதற்கு நன்றி என்றார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X