நடிகைகளின் நிர்வாணப் படங்களை வெளியிட்டவருக்கு சிறை
நியூயார்க்: நடிகைகளின் நிர்வாண படத்தை வெளியிட்டவருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
இணைய பயன்பாடு அதிகரித்த பிறகு அதனால் ஏற்படும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களில் மூக்கை நுழைப்பதும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் ஜார்ஜ் கரஃபனோ என்ற 26 வயது இளைஞன், பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ், கிர்ஸ்ட்டன் டன்சட், கேட் அப்டன் உள்ளிட்ட 200 பேரின் ஐ க்ளவுட் கணக்குகளை முடக்கி, அவற்றிலிருந்து நடிகைகளின் நிர்வாண படங்களையும், அந்தரங்க புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து யூசர்நேம் பாஸ்வேர்ட் கேட்பதுபோல் இமெயில் அனுப்பி அக்கவுண்டை ஹேக் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 18 மாதங்களாக இதைச் செய்து வந்த ஜார்ஜ் கரஃபனோவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
எட்டு மாத சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம் மூன்றாண்டுகளுக்கு குற்றவாளி கண்காணிக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதே குற்றத்திற்காக 2014 ஆம் ஆண்டு ஒரு வருடம் சிறை தண்டனைப் பெற்ற நான்கு குற்றவாளிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











