கடற்கரை மணலில்.. பிங்க் பிகினியில்.. படுத்து உருளும் ஜெனிபர் லோபஸ்.. ஹீட்டாகும் இணையம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாடகியும் ஹாலிவுட் நடிகையுமான ஜெனிபர் லோபஸ், பிங்க் நிற பிகினியில் பீச்சில் படுத்து உருளும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
50 வயசுல இப்படியொரு ஹாட் ஷேப்பா என ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு இந்த வயதிலும் படு கவர்ச்சியாக இருக்கிறார் ஜெனிபர் லோபஸ்.
கோடை காலம் முடிவதை முன்னிட்டு இப்படியொரு பிகினி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பாத் டப் செல்ஃபி
50 வயதானாலும் இன்னும் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதில், மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகிறார் ஜெனிபர் லோபஸ். சமீபத்தில் அவர் வெளியிட்ட பாத் டப் செல்ஃபி புகைப்படம் 3 மில்லியனுக்கும் மேல் லைக்குகளை குவித்து வேற லெவலில் வைரலானது. நம்ம ஊர் நடிகைகளும் ஜெனிபர் லோபஸின் செல்ஃபியை பார்த்து கமெண்ட் செய்துள்ளனர்.

பாப் சிங்கர்
ஹாலிவுட் படங்கள் மட்டுமின்றி, பாப் இசை உலகில் பல பாடல்களை பாடியும் உலகளவில் ரசிகர்களை சேர்த்துள்ளார் ஜெனிபர் லோபஸ். மெடிசின், ஃபீல் தி லைட், பூட்டி, ஐ எம் ரியல் உள்ளிட்ட பல இசை ஆல்பங்கள் பல மில்லியன் ரசிகர்களை ஜெனிபர் பக்கம் திரள காரணமாக அமைந்தது.

உலகையே மிரட்டிய படம்
1997ம் ஆண்டு வெளியான அனக்கோண்டா படம் உலகையே மிரட்டியது. அந்த படத்தில் ஜெனிபர் லோபஸ் நாயகியாக நடித்து இருந்தார். மேலும், யு டர்ன், பார்கர், தி ஷெல், தி பாய் நெக்ஸ்ட் டோர், தி வெட்டிங் பிளானர் ஹஸ்ட்லர்ஸ் என பல படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

கோடை முடியப் போகுது
கோடை காலம் முடிந்து மழைக் காலம் தொடங்கி விட்டது. கோடைக் காலத்தின் கடைசி நிமிடங்களை ரசிப்பதாக பிங்க் பிகினி அணிந்து கொண்டு, கடற்கரை மணலில் படுத்தபடி போஸ் கொடுத்துள்ள ஜெனிபர் லோபஸின் ஹாட் புகைப்படம், ஒட்டுமொத்த இணையத்தையும் சூடேற்றி உள்ளது.

ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு
நடிகை ரித்திகா சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஜெனிபர் லோபஸின் இந்த ஹாட் புகைப்படத்திற்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர். ஜெனிபர் லோபஸின் சர்வதேச ரசிகர் ஒருவர், அதிகாலை 1:24 மணிக்கு இந்த புகைப்படத்தை பார்த்து தனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டது என்றும், அதன் பிறகு தான் தூங்கவே இல்லை என்றும் கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











