jennifer lopez: பப்பி ஷேம் பர்த் டே.. மேடையிலேயே நழுவிய மேலாடை.. உள்ளாடையோடு நின்ற ஜெனிஃபர் லோபஸ்..
போலந்து: இன்ஸ்டாகிராமில் 274 மில்லியன் ரசிகர்களைக் ஃபாளோவர்ஸ்களாக கொண்டுள்ளவர் பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸ். பாப் பாடகி, நடிகை என்ற அடையாளங்கள் பல இருந்தாலும் ஜெனிஃபர் லோபஸ் எப்போதும் பரபரப்பாக பேசப்படுவது, அவரது காதல் - திருமணம் - விவாகரத்து விகாரங்கள் மற்றும் வித்தியாச வித்தியாசமாக அவர்கள் அணியும் ஆடைகள் குறித்துதான். இப்படி இருக்கும்போது ஜெனிஃபர் லோபஸ் மேடையில் பாடிக் கொண்டு இருக்கும் போது அவரது மேலாடை உடலில் இருந்து நழுவியது. இதனால் அவர் உள்ளாடையுடன் மேடையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் குறிப்பாக யூடியூப் தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பாப் இசை உலகின் ராணியான ஜெனிஃபர் லோபஸ், சமீபத்தில் போலந்தின் வார்சாவில் உள்ள பிஜிஇ நரோடேவி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'அப் ஆல் நைட்: லைவ் இன் 2025' என்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த 24ஆம் தேதி தனது 56வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரசிகர்கள் அவரது பாடலுக்கு உற்சாகமாக கோரஸ் பாட, ஜெனி மேடையில் நடனமாடிக் கொண்டே பாடிக் கொண்டு இருந்தார். குறிப்பாக ரசிகர்கள் அவருக்கு ஹேப்பி பர்த் டே எனப் பாடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். ரசிகர்கள் இவ்வாறு பாடியதும் மிகவும் உற்சாகமடைந்து, ரசிகர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவர் அணிந்திருந்த தங்க நிற மினி ஸ்கர்ட் எதிர்பாராதவிதமாக நழுவியதால், உள்ளாடை தெரியும் சூழல் ஏற்பட்டது.இந்த சம்பவத்தால் முதலில் அதிர்ச்சி அடைந்த ஜெனிஃபர் லோபஸ், சுதாரித்து தனது கைகளால் தனது உடல் பாகங்களை மறைக்க முயன்றார். ஆனால், அவரால் தனது மேலாடையையும் பிடிக்க முடியவில்லை, தனது உடல் பாகங்களையும் மறைக்க முடியவில்லை. உடனே அவர் சாதுர்யமாக பேசியதுதான் பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது, "நான் பொதுவாக உள்ளாடை அணிவதில்லை, இன்று ஏன் அணிந்தேன் என்று தெரியவில்லை," என்று கூறி, "இந்த ஸ்கர்ட் எனக்கு வேண்டாம், நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்," என்று அதை ரசிகர்களை நோக்கி வீசினார். ரசிகர்களும் அதைப் பிடிக்க போட்டி போட்டுக் கொண்டனர். அதன் பின்னர் உள்ளாடையுடனே மேடையில் பாட்டுப் பாடி ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் பப்பி ஷேம் பர்த் டேவாக மாறிடுச்சே ஜெனி என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
திரைப்படங்கள்: நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, 'செலேனா', 'அனகோண்டா', 'அவுட் ஆஃப் சைட்' போன்ற படங்களில் நடித்து, அதிக சம்பளம் வாங்கும் லத்தீன் நடிகையாக புகழ் பெற்றவர் ஜெனிஃபர் லோபஸ். இவரது காதல்கள், திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் உலகப் புகழ் பெற்றவை. அதாவது இவர் தனது பதின் பருவத்தில் இருந்து இப்போது வரை காதலிலும் ராணியாகவே உள்ளார். தனக்கு எப்போதும் காதலில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

காதல்கள் - திருமணங்கள் - விவாகரத்துகள்: முதலில், ஜெனிஃபர் லோபஸ், டேவிட் க்ரூஸுடன் காதலில் இருந்தார். பின்னர், கியூபாவைச் சேர்ந்த ஓஜானி நோவாவை மணந்தார், ஆனால் ஒரு வருடத்தில் அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு, பாப் பாடகர் சியான் காம்ப்ஸுடன் சிறிது காலம் காதலில் இருந்தார். பின்னர், கிறிஸ் ஜூட்டை மணந்து, இரண்டு ஆண்டுகளில் அவரையும் விவாகரத்து செய்தார். இவரது நீண்ட கால திருமண உறவு என்றால் அது, பாடகர் மார்க் ஆண்டனி தான். மார்க் ஆண்டனியை மணந்து, பத்து ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். அதன் பின்னர் விவாகரத்து செய்தார். அதன்பிறகு பென் அஃப்லெக்கை மணந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் அவரை விவாகரத்து செய்தார். இந்த விவாகரத்தில், அஃப்லெக்கிடமிருந்து ரூ. 900 கோடி ஜீவனாம்சம் கோரியது ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications











