நீங்க நம்பலன்னாலும் இதுதான் நெசம்.. 50 வயதில் என்ன ஒரு ஹாட்னஸ்.. பிகினியில் மின்னும் ஜெனிபர் லோபஸ்!
மியாமி: பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிபர் லோபஸ் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் மின்னும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
50 வயதாகும் இந்த அனகோண்டா பட நடிகை, இந்த வயதிலும் தனது உடலை இளமையாகவும் கவர்ச்சியாகவும் வைத்துள்ளார்.
அதனால் தான் இவரை 131 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர்.

உலகளவில் பிரபலம்
அனகோண்டா, தி செல், தி பாய் நெக்ஸ்ட் டோர் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான இவர், ஏகப்பட்ட ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டு உலகளவில் பிரபலமானவர். 131 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக, அவ்வப்போது இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் சர்வதேச அளவில் வைரலாகி வருகின்றன.

பிகினி பேபி
ஹாலிவுட் ரசிகர்களின் கவர்ச்சிக் கன்னியான ஜெனிபர் லோபஸ், பிகினி உடைகளில் சர்வ சாதாரணமாக ஏகப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். அவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் மில்லியன் கணக்கில் ஹார்ட்டீன்களும், பல்லாயிரக்கணக்கான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

அழகின் ரகசியம்
50 வயதிலும் இவ்வளவு செக்ஸியான தேகத்தை ஜெனிஃபர் லோபஸ் கொண்டிருக்க காரணம் தீவிரமான உடற் பயிற்ச்சி தான். எந்த நேரத்திலும், எந்த காரணத்திற்காகவும், ஜிம்முக்கு போவதை ஜெனிஃபர் லோபஸ் நிறுத்துவதே இல்லை. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவே அலறி கிடந்த நேரத்திலும் விஐபி பாஸ் வாங்கி ஜிம்முக்கு சென்றவர் ஜெனிபர் லோபஸ்.

காதல் லீலைகளும்
50 வயதாகும் ஜெனிஃபர் லோபஸ், 44 வயதாகும் அலெக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவரை காதலித்து வருகிறார். இதற்கு முன்னதாக மூன்று பேரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துள்ளார் நடிகை ஜெனிபர் லோபஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், முதல் கணவர் ஒஜானி நோவாவை ஒரே வருடத்தில் இவர் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

மின்னும் பிகினி
கொரோனா காலத்தில் ஊர் சுற்ற முடியாத நிலையில், பல நடிகைகளும், தங்கள் சம்மர் லீவை கோடையின் கடைசி நிமிடங்களில் கொண்டாடி வருகின்றனர். நீச்சல் குளம் ஒன்றில், பிரின்டட் பிகினி உடையை அணிந்து கொண்டு தண்ணீரில் மின்னும் அழகில் ஜெனிபர் லோபஸ் இப்போ வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆட்டி படைத்து வருகிறது.

2 மில்லியன் லைக்ஸ்
செம செக்ஸியான ஜெனிபர் லோபஸின் நீச்சல் குள புகைப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் குயின், ஸ்மோக்கிங் ஹாட், வாவ், எப்படி இப்பவும் இவ்ளோ ஹாட்டா இருக்கீங்க என கமெண்ட்டுகளை தட்டி வருகின்றனர். சுமார் 2 மில்லியன் லைக்குகளும் ஜெனிபர் லோபஸின் இந்த புகைப்படத்திற்கு வெறும் 5 மணி நேரத்தில் குவிந்துள்ளது.


Click it and Unblock the Notifications











