ஜெர்ஸி ஹிந்தி டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியானது!
சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகர் நானியின் நடிப்பில் வெளியானது ஜெர்ஸி திரைப்படம்.
கௌதம் தின்னனுரி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் இப்பொழுது ஹிந்தியில் உருவாகி இருக்க அதன் டிரைலர் மற்றும் வெளியீட்டு தேதி தற்பொழுது வெளியாகி உள்ளது.

கிரிக்கெட்டை மையப்படுத்தி
தெலுங்கு சினிமாவில் நேச்சுரல் ஸ்டார் என அழைக்கப்படும் நானி தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நானியின் திரைப்படம் ஜெர்ஸி. உணர்வுபூர்வமாக அனைவரையும் கவர்ந்த இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தியதாக எடுக்கப்பட்டது. வாழ்க்கையில் கிரிக்கெட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது, கிரிக்கெட் தான் உலகம் என வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் அதில் சாதிக்க எத்தகைய சூழ்நிலைகளை சந்திக்கிறார் என்பதை மிகவும் உணர்வுபூர்வமாக இந்த படம் வெளிப்படுத்தியிருந்தது

ஜெர்ஸி
இயக்குனர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவான ஜெர்ஸி தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று ஹிட்டடித்தது. நானியின் திரை வாழ்க்கையிலேயே மிக முக்கிய படமாக அமைந்தது. மேலும் நடிகர் ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நானியின் மகனாக நடித்திருந்தார். அனைத்து சென்டர்களிலும் படம் சக்கை போடு போட்டு வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை மேலும் பக்கபலமாக அமைந்தது. சூர்யதேவர நாக வம்சி இப்படத்தை தயாரிக்க ஜீ ஸ்டுடியோஸ் வெளியிட்டது.

இந்தியில் ரீமேக்
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ஜெர்ஸி இப்பொழுது ஹிந்தியில் அதே பெயரில் உருவாகியுள்ளது. தெலுங்கில் இயக்கிய இயக்குனர் கௌதம் தின்னனுரி இந்தி ரீமேக்கையும் இயக்கி யுள்ளார். இந்தியில் ஷாகித் கபூர் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் ஷாகித் கபூர் ஏற்கனவே தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து பட்டையை கிளப்பி பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்தார் . இப்போது அதைத் தொடர்ந்து மற்றுமொரு தெலுங்கு திரைப்படமான ஜெர்ஸி இந்தி ரீமேக்கில் நடித்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியானது
மேலும் இதில் கதாநாயகியாக ம்ருனால் டகுர் நடித்துள்ளார். பங்கஜ் கபூர் முக்கிய வேடத்தில் வருகிறார். ஹிந்தி ரசிகர்களுக்காக எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் தெலுங்கில் எப்படி உருவானது அதே சாயலில் இந்தியிலும் படம் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் தயாராகி வந்த ஜெர்ஸி ஹிந்தி ரீமேக்கின் டிரைலர் தற்போது வெளியாகி பட்டையைக் கிளப்புகிறது . ஷாகித் கபூர் முதல்முறையாக கிரிக்கெட் வீரராக உணர்வுபூர்வமாக நடித்துள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 31-ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அல்லு அரவிந்த், தில் ராஜு, சூர்யதேவர நாக வம்சி மற்றும் ஆமென் கில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











