ப்பா.. என்னா பாராட்டு.. இதை சத்தியமா ஹரீஷ் கல்யாண் எதிர்பார்க்கவே இல்லையாம்!

ஜெர்சி படத்தில் தன்னுடைய நடிப்பிற்கு கிடைத்து வரும் பாராட்டுகளால் ஹரீஷ் கல்யாண் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Recommended Video

Actor Harish Kalyan: ஆந்திராவில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்ற ஹரீஷ் கல்யாண் நடித்த ஜெர்சி

சென்னை: ஹரீஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெர்சி திரைப்படம், ஆந்திராவில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகர் ஹரீஷ் கல்யாண், பியார் பிரேமா காதல் படம் மூலம் தமிழில் தனக்கான இடத்தை உறுதி செய்தார். தற்போது 'தனுசு ராசி நேயர்களே' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலன் கோபாலன் தயாரிக்க, சஞ்சய் பாரதி இயக்கும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

மகிழ்ச்சி:

மகிழ்ச்சி:

இதற்கிடையே, நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள ஜெர்சி தெலுங்குப் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். படத்தைப் பார்த்த பலரும், ஹரீஷின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும், விமர்சனங்களிலும் அவர் நடித்த முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதனால் ஹரீஷ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ரசிகர்களின் அன்பு:

ரசிகர்களின் அன்பு:

இது தொடர்பாக அவர் கூறுகையில், "இது முற்றிலும் நானே எதிர்பாராதது, என் கதாபாத்திரத்தை கவனித்து, இந்த அளவிற்கு என்னை பாராட்டுவார்கள் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. தெலுங்கு ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

போன் வாயிலாக பாராட்டு:

போன் வாயிலாக பாராட்டு:

இந்த கதாபாத்திரத்திற்கு என்னை நடிக்க கேட்டபோதே அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன், ஆனால் இந்த அளவுக்கு மக்களை சென்று சேரும் என்று நினைக்கவில்லை. இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், புகழ்பெற்ற இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் எனக்கு போன் செய்து என்னை பாராட்டுவது தான்.

நானிக்கு நன்றி:

நானிக்கு நன்றி:

இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஒவ்வொருவருக்கும், குறிப்பாக என் நண்பர் நானிக்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X