மெர்சல் காட்ட வரும் மேட்ரிக்ஸ் 4ம் பாகம்… அசத்தல் ரோலில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை!

மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை ஜெசிகா ஹென்விக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்: இதுவரை வெளியான மேட்ரிக்ஸ் படத்தின் மூன்று பாகங்களும் பிளாக்பஸ்டர் ஆன நிலையில், அதன் நான்காவது பாகம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில், நாயகனாக கீனு ரீவ்ஸ் மற்றும் நாயகியாக கேரி அன்னே மோஸ் நடித்திருந்தனர்.

தற்போது, உருவாகி வரும் 4ம் பாகத்தில் அயன் ஃபிஸ்ட், கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்ளிட்டவற்றில் நடித்த ஜெசிகா ஹென்விக் இணைந்துள்ளார்.

மேட்ரிக்ஸ் மிரட்டல்

மேட்ரிக்ஸ் மிரட்டல்

மேட்ரிக்ஸ் படத்தின் முதல் பாகம் 1999ம் ஆண்டு வெளியானது. அந்த கால கட்டத்திலேயே சைபர் திரெட், ஹேக்கிங், வெர்ச்சுவல் ரியாலிட்டி என தற்போது தொழில்நுட்ப யுகத்தில் கண்டறியப்பட்ட பல விஷயங்களை முதன்முதலாக உலகிற்கு காட்டி மிரட்டிய படம் தான் மேட்ரிக்ஸ்.

மேட்ரிக்ஸ் டிரைலஜி

மேட்ரிக்ஸ் டிரைலஜி

கீனு ரீவ்ஸ் நடிப்பில் 1999ம் ஆண்டு மேட்ரிக்ஸ் படத்தின் முதல் பாகம் வெளியானது. அந்த படத்தின் தொடர்ச்சியாக 2003ம் ஆண்டு மேட்ரிக்ஸ் ரீலோடட் மற்றும் அதே ஆண்டின் இறுதியில் மேட்ரிக்ஸ் ரிவல்யூஷன் ஆகிய படங்கள் வெளியாகின.

உலகளவில் மேட்ரிக்ஸ் படங்களின் டிரைலஜி மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் சாதனையை நிகழ்த்தின.

காணாமல் போன கீனு ரீவ்ஸ்

காணாமல் போன கீனு ரீவ்ஸ்

மேட்ரிக்ஸ் படங்களின் மூலம் ஹாலிவுட் டாப் ஹீரோ பட்டியலில் முதலிடத்தில் இருந்த கீனு ரீவ்ஸ், அதற்கு அடுத்து நடித்த படங்கள் சொதப்பிய நிலையில், ஹாலிவுட்டின் டாப் ஹீரோ பட்டியலில் இருந்தே காணாமல் போனார். பேய் படமான ஜான் விக் வரிசை படங்களில் நடித்து வந்த கீனு ரீவ்ஸ் மீண்டும் தனது இடத்தை பிடிக்க மேட்ரிக்ஸை கையிலெடுத்துள்ளார்.

ஜெசிகா ஹென்விக்

அயன் ஃபிஸ்ட் படத்தில் நாயகியாக நடித்துள்ள ஜெசிகா ஹென்விக், உலகப்புகழ் பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் நிமேரியா சாண்ட் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது, கீனு ரீவ்ஸ் நடிப்பில் உருவாகவுள்ள மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் ஜெசிகா ஹென்விக் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X