Vijay Yesudas: ரஜினி மகள் வீட்டில் மட்டுமல்ல.. விஜய் யேசுதாஸ் வீட்டிலும் நகைகள் கொள்ளை

சென்னை: Jewells robbery at Vijay Yesudas house(விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் கொள்ளை) ரஜினி மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் நகைகள் கொள்ளைப்போன சூழலில் நடிகரும், பாடகருமான விஜய் யேசுதாஸ் வீட்டிலும் நகைகள் கொள்ளை போயுள்ளன.

இந்திய அளவில் பிரபலமான பாடகர்களில் ஒருவர் யேசுதாஸ். பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கும் அவருக்கு விஜய் யேசுதாஸ் என்ற மகன் இருக்கிறார். இவரும் சினிமாவில் பிரபல பாடகராக இருந்துவருகிறார்.

பாடகர் மட்டுமல்ல நடிகரும்கூட

பாடகர் மட்டுமல்ல நடிகரும்கூட

பல பாடல்களை பாடியிருக்கும் விஜய் யேசுதாஸ் தனுஷ் நடித்த மாரி திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த அந்தப் படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் விஜய் யேசுதாஸுக்கு நடிப்பில் நல்ல ஒரு அறிமுகமாக அமைந்தது மாரி திரைப்படம். அதன் பிறகு அவர் நடித்த படைவீரன் படம் தோல்வியை சந்தித்தது.

விஜய் யேசுதாஸ் வீட்டில் கொள்ளை

விஜய் யேசுதாஸ் வீட்டில் கொள்ளை

விஜய் யேசுதாஸுக்கு சென்னை அபிராமிபுரத்தில் வீடு ஒன்று இருக்கிறது. சென்னை வரும்போது அவர் இந்த வீட்டில் தங்குவது வழக்கம். அவருடன் அவரது மனைவி தர்ஷணாவும் அங்கிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அபிராமிபுரம் வீட்டிலிருந்து 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போயிருப்பதாக அவரது மனைவி தர்ஷணா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வீட்டில் வேலை செய்பவர்கள் மீது சந்தேகம்

வீட்டில் வேலை செய்பவர்கள் மீது சந்தேகம்

தர்ஷணா அளித்த புகாரில், கடந்த வருடம் டிசம்பர் இரண்டாம் தேதி தங்க நகைகளை பார்த்தேன். அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் பார்த்தபோது வீட்டில் இருந்த நகைகளை காணவில்லை. இந்த நகைகள் காணாமல் போனதற்கும் வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோருக்கும் சம்பந்தம் இருப்பதாக சந்தேகம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையில் இறங்கிய காவல் துறை

விசாரணையில் இறங்கிய காவல் துறை

தர்ஷணா அளித்த புகாரின் அடிப்படையில் அபிராமிபுரம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கின்றனர். அந்தவகையில் விஜய் யேசுதாஸின் வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமரா மற்றும் அவரது வீட்டுக்கு அருகில் இருக்கும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்துவருகின்றனர். அதுமட்டுமின்றி வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களையும் நேரில் வரவழைத்து விசாரித்துவருகின்றனர்.

ரஜினி மகள் வீட்டில் நடந்த கொள்ளை

ரஜினி மகள் வீட்டில் நடந்த கொள்ளை

முன்னதாக, ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் 60 பவுன் தங்க, வைர,நவரத்தின கற்கள் பதித்த நகைகள் காணாமல் போனதாக ஐஸ்வர்யா புகார் அளித்தார். இதனையடுத்து அவரது வீட்டில் வேலை செய்தஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிர்நுது 143 சவரன் தங்க நகை, 30 கிராம் வைர நகை, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இப்படிப்பட்ட சூழலில் தனது வீட்டிலிருந்து 200 சவரன் நகைகள் காணாமல் போயிருப்பதாக ஐஸ்வர்யா புதிய புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரபலங்களின் வீட்டில் அடுத்தடுத்து நகைகள் கொள்ளைப்போவது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X