ரொம்ப அன்பானவர்.. அவரோட 25வது படத்துல நானும் இருந்தது பெருமை.. ஜெயம் ரவியை புகழும் நிதி அகர்வால்

By

சென்னை: ஜெயம் ரவியின் 25 வது படத்தில் நானும் இருப்பதை பெருமையாக கருதுகிறேன் என்று நடிகை நிதி அகர்வால் கூறியுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவியின் 25-வது படம், 'பூமி'. இதை, லக்‌ஷ்மண் இயக்கியுள்ளார். இவர், ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கியவர்.

இதில் ஜெயம் ரவி ஜோடியாக, நிதி அகர்வால் நடிக்கிறார். இமான் இசை அமைத்துள்ளார்.

முக்கிய பிரச்சனை

முக்கிய பிரச்சனை

டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனையை பேசுவதாகக் கூறப்படும் இந்தப் படம் மே 1 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுனால் இதன் ரிலீஸும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு இந்தப் படம், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நாயகி பாத்திரம்

நாயகி பாத்திரம்

ஒரு தனி மனிதன், தன் சொந்த ஊரில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த முயலும் போராட்டம்தான் கதை. இதில் ஹீரோயினாக நடித்துள்ள நிதி அகர்வால், படம் பற்றி கூறியதாவது: வழக்கமாக நியாயத்திற்காக, லட்சியத்திற்காகப் போராடும் நாயகனின் கதைகள் மற்றும் நாயகி பாத்திரம் கவனிக்கும் படியாக இருக்காது.

நடிப்பு திறமை

நடிப்பு திறமை

ஆனால் பூமி படம், அதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. இதில் என் கேரக்டர் மிகவும் முக்கியத்துவம் கொண்டது. இதில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அளவில் கேரக்டர் கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். ஜெயம் ரவி அன்பானவர். நடிக்கும் போது ஆதரவாக இருந்தார்.

நூறு சதவிகிதம்

நூறு சதவிகிதம்

அவரது அர்ப்பணிப்பும் சினிமா மீதான அபரிமிதமான காதலும் தான் மக்களிடம் அவருக்கு இத்தனை அன்பை பெற்று தந்துள்ளது. அவருடைய 25 வது படத்தில் நானும் பங்கு கொண்டதை பெருமையாகக் கருதுகிறேன். இது நூறு சதவிகிதம் குடும்பங்கள் கொண்டாடும் படம். இவ்வாறு நிதி அகர்வால் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X