twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யட்சன், ஸ்ட்ராபெரியை பின்னுக்குத்தள்ளி வசூலில் கலக்கும் 'தனி ஒருவன்'

    By Manjula
    |

    சென்னை: கடந்த வாரம் வெளியான யட்சன் மற்றும் ஸ்ட்ராபெரி போன்ற படங்களை பின்னுக்குத்தள்ளி வசூலில் இன்னும் முதலிடத்தில் இருக்கிறது ஜெயம் ரவியின் தனி ஒருவன் திரைப்படம்.

    வெளியாகி 3 வாரங்கள் கடந்தும் கூட இன்னும் வசூலில் மற்ற மொழிப் படங்கள் மற்றும் தமிழ்ப்படங்கள் அனைத்திற்கும் வசூலில் பலத்த போட்டியை கொடுத்து வருகிறது தனி ஒருவன் திரைப்படம்.

    சென்னை பாக்ஸ் ஆபீஸில் முன்னணி வகிக்கும் படங்களின் வசூல் நிலவரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    தனி ஒருவன்

    தனி ஒருவன்

    ஆகஸ்ட் 28 ம் தேதி வெளியாகிய தனி ஒருவன் திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. படம் வெளியாகி 18 தினங்கள் தாண்டியும் கூட இன்னும் 90% அதிகமான திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன. இதனால் திரையரங்க உரிமையாளர்களும் தனி ஒருவன் திரைப்படத்தைத் திரையிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சென்னையில் மட்டும்

    சென்னையில் மட்டும்

    கடந்த வாரம் சென்னையில் மட்டும் 174 காட்சிகள் திரையிடப்பட்டு சுமார் 75.75 லட்சங்களை வசூலித்து இருக்கிறது படம். சென்னையில் மட்டும் இதுவரை 4.86 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது படம்.

    50 கோடி

    50 கோடி

    தமிழ்நாடு முழுவதும் இதுவரை சுமார் 50 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது படம். சமீபத்தில் வெளியான யட்சன், ஸ்ட்ராபெரி மற்றும் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றான பாகுபலி ஆகிய படங்களை பின்னுக்குத்தள்ளி வசூலில் முன்னணியில் இருக்கிறது அரவிந்த் சாமி - ஜெயம் ரவியின் தனி ஒருவன்.

    யட்சன்

    யட்சன்

    ஆர்யா - கிருஷ்ணா கூட்டணியில் கடந்த வாரம் வெளியான யட்சன் திரைப்படம் 180 காட்சிகள் திரையிடப்பட்டு சுமார் 63.83 லட்சங்களை வசூலித்து இருக்கிறது.

    வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க vs யட்சன்

    வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க vs யட்சன்

    ஆர்யாவின் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க திரைப்படம் முதல் வாரத்தில் 165 காட்சிகள் திரையிடப்பட்டு 54.87 லட்சங்களை வசூலித்து இருந்தது. இந்த வசூலை ஒப்பிடும் போது யட்சன் திரைப்படம் ஆர்யாவிற்கு நல்ல ஒரு ஓபனிங்கைக் கொடுத்துள்ளது.

    ஸ்ட்ராபெரி

    ஸ்ட்ராபெரி

    கடந்த வாரம் வெளியான பா.விஜயின் ஸ்ட்ராபெரி திரைப்படம் 90 காட்சிகள் திரையிடப்பட்டு 17.08 லட்சங்களை வசூலித்திருக்கிறது.

    வெற்றிகரமான 3 வது மாதம்

    வெற்றிகரமான 3 வது மாதம்

    படம் வெளியாகி சுமார் 67 நாட்களைத் தாண்டி விட்டது, ஆனால் இன்னும் வசூல் குறையாமல் சென்னை பாக்ஸ் ஆபிசை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம். 10 வது வாரத்தில்(கடந்த வாரம்) 24 காட்சிகள் திரையிடப்பட்டு சுமார் 2.95 லட்சங்களை வசூலித்து இருக்கிறது படம். சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 8.23 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது படம்.

    தனி ஒருவன் வசூலில் இதே வேகத்தில் சென்றால் விரைவில் 100 கோடியை எட்ட வாய்ப்புள்ளது. ஜெயம் ரவி 100 கோடி கிளப்பில் இணைவாரா? பார்க்கலாம்.

    English summary
    Jayam Ravi and Arvind Swamy starrer "Thani Oruvan" has continued its dominance at Chennai box office in its third weekend. It has managed to perform better than new releases like "Yatchan" and "Strawberry" along with blockbuster "Baahubali".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X