டைட்டான டிரஸ்ஸில் தாகமூட்டும் நடிகை ஜான்வி கபூர்!
மும்பை : பாலிவுட்டில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஜான்வி கபூர் விரைவிலேயே தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.
விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்கில் இப்பொழுது ஜான்வி நடித்து வருகிறார்.
கவர்ச்சி புகைப்படங்களை வரையறை இல்லாமல் சமூக வலைதளங்களில் குவித்து வரும் இவர் இப்பொழுது டைட்டான டிரஸ்ஸில் தாகமூட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

தடாக்
ஹீரோயினாக மட்டுமல்லாமல் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டமும் போட்டு செல்லும் நடிகை ஜான்வி கபூர் தடாக் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

வாழ்க்கையை தழுவி
சென்ற ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான குஞ்சான் சக்ஸேனா : தி கார்கில் கேர்ள் இவருக்கு ஹீரோயின் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. நாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த படத்திற்காக நிறைய மெனக்கெட்டுள்ளார். இந்திய விமான ராணுவத்தில் பணிபுரிந்த குஞ்சான் சக்ஸேனா என்பவரின் வாழ்க்கையை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

காமெடி கலந்த ஹாரர்
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வரும் ஜான்வி கபூர் இதுவரை க்யூட்டான ஹீரோயினியாக வந்து அனைவரையும் மகிழ்வித்து வர ரூஹி திரைப்படத்தில் பேயாக நடித்து கலக்கியிருந்தார் . காமெடி கலந்த ஹாரர் படமாக வெளியான ரூஹி ரசிகர்களின் பேராதரவோடு சுமாரான வெற்றியைப் பெற்று தந்தது.

தாகமூட்டும் டைட் டிரஸ்ஸில்
பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா இந்தி ரீமேக் குட்லக் ஜெர்ரி படத்தில் இப்பொழுது நடித்து வருகிறார் இதன் படப்பிடிப்பு பஞ்சாபில் நடைபெற்று வந்தது. கவர்ச்சிப் புகைப்படங்களை வரையறை இல்லாமல் சமூக வலைதளங்களில் குவித்து வரும் ஜான்வி கபூர் இப்பொழுது டைட்டான உடையில் தினுசு தினுசாக போஸ் கொடுத்துக்கொண்டு தாகமூட்டும் புகைப்படங்களை இப்பொழுது பதிவிட்டு இருக்க ரசிகர்கள் ஜொள்ளு விட்டு பார்த்து ரசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











