இன்ஸ்டாகிராமில் இன்ஸ்டன்ட் ஹிட்டான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி

By Siva

மும்பை: நடிக்க வந்த பிறகு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை அனைவரும் பார்க்கும்படி செய்துள்ளார்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தாய் வழியில் நடிக்க வந்துள்ளார். தடக் என்ற படம் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அந்த படத்தில் தான் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் தான் ஹீரோ.

ஜான்வி

ஜான்வி

இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ள ஜான்வி இத்தனை நாட்களாக தனது கணக்கை பிரைவேட்டாக வைத்திருந்தார். அதாவது அவரை ஃபாலோ செய்பவர்களால் மட்டுமே இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்க்க முடியும்.

பப்ளிக்

பப்ளிக்

நடிகையாகிவிட்ட கையோடு தனது இன்ஸ்டாகிராம் கணக்கை பப்ளிக்காக மாற்றியுள்ளார். அதாவது யார் வேண்டுமானாலும் ஜான்வியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்க முடியும்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

ஜான்வி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை பப்ளிக் ஆக்கிய அன்று மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவரை ஃபாலோ செய்துள்ளனர். அவர் இன்ஸ்டாகிராமில் அழகு அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தங்கை

தங்கை

அம்மா ஸ்ரீதேவி, அப்பா போனி கபூர், தங்கை குஷி கபூர் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களையும் ஜான்வி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் படம் தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X