சூட்டைக் கிளப்பும் பிகினி உடையில் நடிகை ஸ்ரீதேவியின் மகள்... பற்றி எரியும் இணையதளம்!
மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
தமிழில் நயன்தாராவின் நடிப்பை ஹிட்டடித்த கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார்.
கொளுத்தும் வெயிலில் ஹாட்டான பிகினி உடையில் வீட்டுத்தோட்டத்தில் மல்லாக்க படுத்து போஸ் கொடுத்த கிளுகிளுக்கும் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை சூடாக்கி உள்ளது.

தொடர்ந்து ஹிட்டாகி
பாலிவுட்டில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் தொடர்ந்து ஹிட்டாகி வர அடுத்தடுத்து படங்கள் வெளியாக வரிசை கட்டிக் கொண்டு நிற்கிறது.

தோஸ்தானா 2
திரைத்துறையில் உலாவரும் பல கிசுகிசுக்களில் தற்போது ஜான்வியும் சிக்கியுள்ளார். இளம் நடிகர் கார்த்திக் ஆர்யான்,ஜான்வி கபூர் காதலிப்பதாகவும் இருவரும் அடிக்கடி டேட்டிங் சென்று வருவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதற்கிடையில் இருவரும் இணைந்து தோஸ்தானா 2ல் நடித்து வருகின்றனர்.

குட்லக் ஜெர்ரி
டாக்டர், விஜய் 65 உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா நயன்தாரா, யோகி பாபுவின் நடிப்பில் வெளியாகி தமிழில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. தற்போது இந்த படம் ஹிந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. நயன்தாராவின் கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ளார்.

வீட்டுத்தோட்டத்தில் மல்லாக்க படுத்த
தோஸ்தானா 2, குட்லக் ஜெர்ரி ஆகிய படங்களை தொடர்ந்து மலையாள படம் ஹெலன் ரீமேக்கிலும் ஜான்வி கபூர் நடிக்க இருக்க தமிழில் எப்பொழுது அறிமுகமாவார் என தமிழ் ரசிகர்கள் பலரும் ஏங்கி போய் உள்ளனர். இந்த நிலையில் தற்போது செம ஹாட்டான டூ பீஸில் வீட்டுத்தோட்டத்தில் மல்லாக்க படுத்தவாறு சூட்டைக் கிளப்பும் வகையில் படுகவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை பற்ற வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











