மயிலு மகளுக்கு அடித்தது ஜாக்பாட்: வியக்கும் பாலிவுட்
மும்பை: ஸ்ரீதேவியின் மகளுக்கு அடித்த ஜாக்பாட் பற்றி தான் பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தாய் வழியில் நடிகையாகிவிட்டார். இதற்காக அவர் அமெரிக்கா சென்று நடிப்பு குறித்து படித்துவிட்டு வந்தார்.
படிப்பு முடிந்ததும் தடக் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இஷான்
ஜான்வி ஹீரோயினாக அறிமுகமாகும் தடக் படத்தில் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் ஹீரோவாக நடிக்கிறார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

ரீமேக்
சூப்பர் ஹிட்டான சாய்ரத் என்னும் மராத்தி படத்தின் இந்தி ரீமேக் தான் தடக். முதல் பட வேலையே முடியாத நிலையில் ஜான்விக்கு அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

ரோஹித் ஷெட்டி
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான டெம்பர் படத்தை ரோஹித் ஷெட்டி இந்தியில் சிம்பா என்ற பெயரில் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளாராம்.

ஜாக்பாட்
ரோஹித் ஷெட்டியின் சிம்பா படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரோஹித் ஷெட்டியின் மசாலா படத்தில் நடிப்பது ஜான்விக்கு நல்லது என்று அவரது நலவிரும்பியான இயக்குனர் கரண் ஜோஹார் ஸ்ரீதேவியிடம் தெரிவித்துள்ளாராம்.

காத்திருப்பு
ஜான்வியை கரண் ஜோஹார் தான் பாலிவுட்டில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். அதற்காகவே காத்திருந்தார். இறுதியில் கரண் ஜோஹார் தயாரிக்கும் தடக் படம் மூலம் ஜான்வி ஹீரோயினாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications