சபாஷ் சரியான போட்டி.. அக்காவுக்கே டஃப் கொடுக்கிறாரே.. ஸ்ரீதேவியின் 2வது மகளின் கவர்ச்சி தாண்டவம்!
மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் தயாரிப்பாளர் போனி கபூருக்கும் பிறந்த மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட் ஹீரோயினாக வலம் வரும் நிலையில், நெட்பிளிக்ஸின் தி ஆர்ச்சீஸ் படத்தின் மூலம் ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூரும் ஹீரோயினாக அசத்த உள்ளார்.
வெறும் 22 வயதே ஆகும் குஷி கபூர் சினிமாவில் நுழைய உள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் பிகினி உடைகளில் படு ஹாட்டாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளன.

அக்கா ஜான்வி கபூருக்கே கவர்ச்சியில் டஃப் கொடுக்கும் விதமாக தங்கை குஷி கபூர் கோதாவில் குதித்துள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
அப்படியே ஸ்ரீதேவி மாதிரியே: மறைந்த நடிகை ஸ்ரீதேவியை போலவே அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் இருக்கிறார் என ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே இளைய மகள் தான் அம்மாவை போல இருக்கிறார் என திடீரென கட்சித் தாவி வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில் ஜொலிக்க வேண்டுமென்றால் அக்காவை போலவே இன்ஸ்டாகிராமிலும் பிட்டுத் தூணியுடன் போஸ் கொடுக்க வேண்டும் என்பதை புரிந்துக் கொண்ட குஷி கபூர் அதிரடியாக ஏகப்பட்ட பிகினி உடைகளை வாங்கி நடத்தி உள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தான் தற்போது இந்தியளவில் டிரெண்டாகி வருகின்றன.
அக்காவுக்கே ஆப்பு: நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் சும்மா போட்டோ போட்டாலே டிரெண்டாகி விடுவார். இந்நிலையில், அவரை விட ஓவர் நைட்டில் அவரது தங்கை குஷி கபூர் வெளியிட்ட பிகினி போட்டோக்கள் காட்டுத் தீ போல இளைஞர்களை அதிகம் கவர்ந்து வருவதாக கூறுகின்றனர்.

ஷாருக்கானின் மகள் சுஹானா கான் அறிமுகமாகும் தி ஆர்ச்சிஸ் நெட்பிளிக்ஸ் படைப்பு மூலமாகவே குஷி கபூர்ம் அறிமுகமாகிறார். ஏற்கனவே ஒரு ஷார்ட் பிலிமில் நடித்துள்ள குஷி கபூர் அடுத்தடுத்து பாலிவுட் படங்களிலும் கமிட் ஆகி உள்ளார்.
ஹாட்னஸ் அலர்ட்: இளம் நடிகை குஷி கபூர் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்டுள்ள லேவண்டர் நிற பிகினி போட்டோக்கள் மற்றும் கருப்பு நிற கவர்ச்சி கிராப் டாப் உடை என ஏகப்பட்ட போட்டோக்கள் பல பிரபலங்களின் பார்வையையும் கவர்ந்து லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி உள்ளன.



Click it and Unblock the Notifications











