ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக நடிக்கும் ஜான்வி கபூர்!

சென்னை : பாலிவுட்டில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை ஜான்வி கபூர்.

சமீபத்தில் வெளியான இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் இவரது மார்க்கெட் மட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தொடர்ந்து இந்தியில் மட்டுமே படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் தென்னிந்திய படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து வர இப்பொழுது ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கவர்ச்சி புகைப்படங்களை

கவர்ச்சி புகைப்படங்களை

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தியில் படங்களில் நடித்து இளம் நடிகையாக பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளார். நடித்த சில படங்களிலேயே கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி வெளுத்து வாங்கும் இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

இந்தி ரீமேக்

இந்தி ரீமேக்

முன்னணி நடிகைகளே தயங்கும் அளவிற்கு கவர்ச்சி எக்கச்சக்கமாக காட்டி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு அசர வைத்து வரும் ஜான்வி கபூர் தற்பொழுது தோஸ்தானா 2 மற்றும் குட்லக் ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குட்லக் ஜெர்ரி நயன்தாராவின் நடிப்பில் தமிழில் வெளியான கோலமாவு கோகிலா இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயமாக நடிப்பேன்

கட்டாயமாக நடிப்பேன்

தடக்,கோஸ்ட் ஸ்டோரிஸ், குன்ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள், ரூஹி என இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்றிருக்க மற்ற மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இதுவரை தென்னிந்திய படங்களில் நடிக்க தயக்கம் காட்டி வரும் ஜான்வி கபூர் நல்ல கதை அமைந்தால் கட்டாயமாக நடிப்பேன் என தெரிவித்திருந்தார்.

இறுதிகட்ட பேச்சுவார்த்தை

இறுதிகட்ட பேச்சுவார்த்தை

இந்தநிலையில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எஸ்எஸ்.ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து கொரடலா சிவா மற்றும் கேஜிஃஎப் இயக்குனர் பிரசாந்த் நீலுடன் இணைந்து பணியாற்ற உள்ள ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக நடிக்க ஜான்வி கபூருக்கு அழைப்பு வந்ததை அடுத்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டாயமாக இந்த படத்தில் நடிக்க ஜான்வி கபூர் சம்மதம் தெரிவிப்பார் என அவரது தரப்பு தெரிவிக்கிறது. எனவே மிக விரைவிலேயே தெலுங்கில் அறிமுகமாகி தென்னிந்தியாவில் கால் தடத்தை வைக்கும் ஜான்வி கபூரை மிக விரைவிலேயே தமிழிலும் காணலாம் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X