பார்ட்டியில் சுத்தி சுத்தி வந்த ஸ்ரீதேவி மகள்: கண்டுக்காத வாரிசு நடிகர்
மும்பை: பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹாரின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் ரன்பிர் கபூரின் கவனத்தை ஈர்க்க நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி என்னென்னவோ செய்தும் அவர் கண்டுகொள்ளவில்லையாம்.
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தாய் வழியில் நடிகையாக உள்ளார். இதற்காக அமெரிக்கா சென்று படித்துவிட்டு வந்துள்ளார். அவரை பிரபல இயக்குனர் கரண் ஜோஹார் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.
ஜான்வி யாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது தெரியவில்லை.

பார்ட்டி
கரண் ஜோஹார் தனது பிறந்தநாளையொட்டி மும்பையில் உள்ள தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார். பார்ட்டிக்கு வந்த ஜான்வி நடிகர் ரன்பிர் கபூரின் கவனத்தை தன் மீது திருப்ப என்னென்னவோ செய்தும் ஒன்றும் நடக்கவில்லையாம்.

ரன்பிர்
பார்ட்டியில் ரன்பிரோ நடிகர் ஆதித்யா ராய் கபூர் மற்றும் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் பிசியாக பேசிக் கொண்டிருந்திருக்கிறார். ஜான்வியை அவர் கண்டுகொள்ளவே இல்லை.

ஜான்வி
ஜான்வி ரன்பிர் கபூரின் கவனத்தை பெற முயற்சித்ததை ரன்பிரை தவிர பார்ட்டிக்கு வந்த அனைவரும் கவனித்துள்ளனர். இந்த புள்ளைக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை என்று முணுமுணுத்துள்ளனர்.

திருமணம்
ரன்பிர் கபூர் தனது காதலியான நடிகை கத்ரீனா கைஃபை பிரிந்துவிட்டார். ரன்பிருக்கு திருமணம் செய்து வைக்க அவர் அம்மா முயற்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











