Don't Miss!
- News
‛ஜெயிட்டோம் மாறா’.. காஷ்மீரில் முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை..ராகுல் போட்ட நெகிழ்ச்சி பதிவு! என்ன?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஷாக்கிங்.. 30 வயது இளம் நடிகை ஹைவேயில் சுட்டுக்கொலை.. துடித்துப் போன கணவர்.. பதறிய திரையுலகம்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நடிகை ரியா குமாரி கொல்கத்தாவுக்கு கணவர் மற்றும் குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்த போது ஹைவேயில் மர்ம நபர்கள் சிலர் சுட்டுக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது நடந்த வாக்குவாதம் காரணமாக நடிகை சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸில் நடிகையின் கணவர் புகார் அளித்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளரான பிரகாஷ் குமார் தனது மனைவி ரியா குமாரி மற்றும் 2 வயது மகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது ஓய்வெடுக்க நிறுத்திய இடத்தில் இப்படியொரு அசம்பாவிதம் நடந்துள்ளது.
சிறப்பாக
நடந்து
முடிந்த
புகழ்
-ரியா
ரிசப்ஷன்..
யாரெல்லாம்
கலந்துக்கிட்டாங்கன்னு
பாருங்க!

ரியா குமாரி சுட்டுக்கொலை
ஜார்கண்டை சேர்ந்த 30 வயதான இளம் நடிகை ரியா குமாரி தனது கணவர் தயாரிப்பாளர் பிரகாஷ் குமார் மற்றும் 2 வயது மகளுடன் ஜார்கண்டில் இருந்து கொல்கத்தாவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். ராஞ்சி அருகே ஹைவேயில் அவர்கள் இளைப்பாற ஒதுங்கிய போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக நடிகை ரியா குமாரி பலியானார்.

கொலையில் முடிந்த கொள்ளை
இளைப்பாற ஹைவேயில் ஒரு இடத்தில் அவர்கள் காரை நிறுத்தி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது 3 நபர்கள் அவர்களிடம் வழிப்பறி செய்ய முயன்றனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடிகையை அந்த மர்ம நபர்கள் துப்பாகியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர் என அருகே இருந்த காவல் நிலையத்தில் பிரகாஷ் குமார் புகார் அளித்துள்ளார்.

3கி.மீ., அலைந்தேன்
துப்பாக்கியால் திடிரென அவர்கள் இஷ்டத்துக்கு சுட்ட நிலையில், அந்த குண்டு தனது மனைவி மீது பட்டு அவர் படுகாயம் அடைந்து மய்ங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்து அந்த திருடர்கள் தப்பிச் சென்று விட்டனர். அதன் பிறகு உதவி கேட்டு 3 கி.மீ., காரில் அலைந்தேன். கடைசியாக பிர்தலா பகுதியில் தான் உதவி கிடைத்தது. உலுபெரியாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது வழியிலேயே ரியா குமாரி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாக பிரகாஷ் குமார் கூறியுள்ளார். புதன்கிழமை அதிகாலை 6 மணியளவில் துப்பாக்கிச் சூடு மஹிஷ்ரேகா பாலம் அருகே நடைபெற்றதாகவும் பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

போலீஸார் விசாரணை
ஜார்கண்ட நடிகை ரியா குமாரி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவிகளை ஆராயவும் இந்த கொலை தொடர்பான விசாரணை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் நடிகையின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.