நடிகை ஜியா தற்கொலை வழக்கு: அமிதாப், ஷாருக், சல்மான் மீது குறை கூறும் அம்மா ராபியா

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை ஜியா கான் மரணத்திற்கு நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் மீது ஜியாவின் தாய் ராபியா குற்றம் சாட்டியுள்ளார்.

கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜியா கான். அவர் இந்தி நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜை காதலித்து வந்தார். இந்நிலையில் அவர் காதலில் ஏற்பட்ட பிரச்சனைகளால் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சூரஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ராபியா

ராபியா

ஜியா கானின் மரணம் தற்கொலை அல்ல மரணம் என்று அவரின் அம்மா ராபியா தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

அவதூறு வழக்கு

அவதூறு வழக்கு

ராபியா தனது மகன் மீது குற்றம் சுமத்தியதையடுத்து ஆதித்யா ராபியாவிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன் நீங்கள் எல்லாம் என் மகளுக்கு அநீதி இழைத்துவிட்டீர்கள். இதற்காக நீங்கள் வருந்துவீர்கள். இதை செய்த குற்றவாளியை கடவுள் தண்டிப்பார் என்று ராபியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான்

ஜியா இல்லாமல் இரண்டாவது ரமலான். அவரின் கையால் உங்கள் மகள் ஒன்றும் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்படவில்லை ஷாருக்கான், சல்மான் கான் என்று ராபியா ட்வீட் செய்துள்ளார்.

பாலிவுட் நட்சத்திரங்கள்

அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களும் என் மகளுக்கு அநீதி இழைத்துவிட்டார்கள். இதற்காக நீங்கள் எல்லாம் வருத்தப்படுவீர்கள் என்று ராபியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X