நடிகை ஜியா கான் மரணம்: அமெரிக்காவை தலையிடச் சொல்லும் அம்மா

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை ஜியா கான் மரணத்தை கொலை என்ற கோணத்தில் பார்க்க போலீசார் மறுத்துவிட்டதாக அவரது தாய் ராபியா தெரிவித்துள்ளார். இதனால் அவர் அமெரிக்காவின் தலையீட்டை அணுகியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜியா அமெரிக்க குடிமகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவருடைய அம்மா ராபியா ஜியா கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து போலீசாரிடம் சில ஆதாரங்களையும் அளித்தார். இந்நிலையில் ஜியாவின் மரணம் தற்கொலை தான் கொலை அல்ல என்று போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ராபியா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அமெரிக்கா

அமெரிக்கா

ஜியாவின் மரணம் கொலை என்ற கோணத்தில் விசாரிக்க போலீசார் மறுத்திவிட்டனர். ஜியா அமெரிக்க குடிமகள் என்பதால் அவரது மரணம் குறித்த விசாரணையில் உதவி செய்யுமாறு நான் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளேன்.

இமெயில்

இமெயில்

எனக்கு அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு இமெயில் வந்தது. அதில் அமெரிக்கா ஜியா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி இந்தியாவுக்கு பரிந்துரைத்து எழுதப்பட்ட கடிதம் இருந்தது. இதை நான் உள்ளூர் அதிகாரிகளிடம் அளிப்பேன்.

எஃ.ப்.பி.ஐ.

எஃ.ப்.பி.ஐ.

நான் அமெரிக்க உதவியை கேட்ட பிறகு வந்த முதல் இமெயிலில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருக்கும் எஃப்.பி.ஐ. அதிகாரி ஒருவர் அமெரிக்க தடயவியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயார் என்று இந்திய போலீசாருக்கு கடிதம் எழுத சம்மதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆலோசனை

ஆலோசனை

அமெரிக்காவுக்கு வெளியே நடக்கும் வழக்கை எஃப்.பி.ஐ. விசாரிக்க முடியாது என்பதால் உங்கள் மகளின் வழக்கில் ஆலோசனை வழங்க முடியும். அதுவும் இந்திய சட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டால் தான் என்று அந்த இமெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X