twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை ஜியா கான் வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட மும்பை ஹைகோர்ட்

    By Siva
    |

    மும்பை: நடிகை ஜியா கான் வழக்கு குறித்து மறுவிசாரணை நடத்துமாறு போலீசாருக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலர் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் தடவியல் அறிக்கையில் ஜியாவின் கழுத்தை யாரோ பெல்ட்டால் இறுக்கிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1ம் தேதி ஜியாவின் அம்மா ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    ஜியா கொலை செய்யப்பட்டார்

    ஜியா கொலை செய்யப்பட்டார்

    ஜியா தற்கொலை செய்யவில்லை என்றும் அவரை யாரோ கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என்றும் ராபியா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    டிரஸ் மாத்திட்டு தற்கொலையா?

    டிரஸ் மாத்திட்டு தற்கொலையா?

    ஜியா இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கருப்பு நிற டிராக் சூட்டில் வீட்டுக்கள் நுழைவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால் அவர் நைட்டியில் தூக்கில் தொங்கினார். தற்கொலை செய்யப் போகிறவர்கள் உடை மாற்றிவிட்டு தான் இறப்பார்களா என்று அவர் தனது மனுவில் கேட்டிருந்தார்.

    சிபிஐ விசாரணை

    சிபிஐ விசாரணை

    எனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராபியா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    மறுவிசாரணை

    மறுவிசாரணை

    ராபியாவின் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து மறுவிசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. ராபியாவின் புகாரை பெற்று இந்த விவகாரத்தை மறுவிசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    English summary
    Bombay High court has ordered fresh probe into Bollywood actress Jiah Khan's suicide case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X