என்னை ஏமாத்திட்டே, நான் போறேன்: நடிகை ஜியா கான் எழுதிய 6 பக்க கடிதம்
மும்பை: தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய 6 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அவரது குடும்பத்தார் போலீசாரிடம் கொடுத்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த திங்கட்கிழமை இரவு மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததாலும், காதல் தோல்வியாலும் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. அவர் நட்சத்திர தம்பதி ஆதித்யா பஞ்சோலி மற்றும் ஜரினா வகாபின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்து வந்தார். தற்கொலை செய்யும் முன்பு அவர் கடைசியாக சூரஜ்ஜுடன் தான் செல்போனில் பேசியுள்ளார்.

இந்நிலையில் ஜியா சாகும் முன்பு தன் கைப்பட 6 பக்க கடிதத்தை எழுதி வைத்திருந்ததை அவரது குடும்பத்தார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கடிதத்தை அவர்கள் நேற்று போலீசாரிடம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் ஜியா கூறியிருப்பதாவது, நீ என்னை ஏமாற்றிவிட்டாய். நம் உறவை கண்டுகொண்டதே இல்லை. இந்த கடிதத்தை நீ படிக்கும் போது நான் இந்த உலகிலேயே இருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











