ஜில் ஜில் வசூலில் “ஜிகர்தண்டா” – ரிலீசான 3 நாட்களில் 7 கோடி ரூபாய் வேட்டை!
சென்னை: மதுரையில் பெயர்போன பானமான "ஜிகர்தண்டா" என்ற பெயருடன் சித்தார்த் நடிப்பில் வெளிவந்துள்ள படமானது வசூலில் பட்டையைக் கிளப்பி வருகின்றது.
ஆகஸ்ட் முதல் நாளன்று சித்தார்த், லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "ஜிகர்தண்டா".
தாமதம், சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இப்படம்தான் இப்போது டாக் ஆப் கோலிவுட் ஆக உள்ளது.

வசூலைக் குவிக்கும் ஜிகர்தண்டா:
ஆவலுடன் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட இப்படமானது வெளியான 3 நாட்களிலேயே பாக்ஸ் ஆபீஸ் வசூலை வாரிக் குவித்து வருகின்றது. முதல் மூன்று நாட்களிலேயே வசூல் 7 கோடியைத் தொட்டுள்ளது.

மகிழ்ச்சியில் சித்தார்த்:
இதுகுறித்து சித்தார்த் தன்னுடைய மகிழ்ச்சியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

சமந்தா பாராட்டு:
நடிகை சமந்தா, தன்னுடைய டுவிட்டரில், "ஜிகர்தண்டா பட குழுவினருக்கு மிக மிக அதிக மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சித்தார்த் ஆகியோருக்கும் எனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன். படம் நன்றாக ஓடுகிறது என கேள்விப்பட்டேன். அருமையான உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

மெய்மறந்து ரசித்த குஷ்பு:
குஷ்பு சுந்தர், "ஜிகர்தண்டா என்ற மந்திர வார்த்தைக்குள்ளேயே இன்னும் சுழன்று கொண்டிருக்கிறேன். அந்த படம் குறித்து காலை முதலே பேசி கொண்டு இருந்தேன். இன்னும் நிறுத்தவில்லை. நடிகர் சித்தார்த்தால் வெகு அரிதாக இது நடந்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார்:
வரலட்சுமி சரத்குமார், "ஜிகர்தண்டா படத்தின் அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகள். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நடிகர் சித்தார்த் குறித்து அதிக பெருமைப்படுகிறேன். அருமையாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

இதமான ஜிகர்தண்டா:
குடிப்பதற்கு இதமான ஜிகர்தண்டா போலவே, திரைப்படமாக வெளிவந்துள்ள ஜிகர்தண்டாவும் ரசிகர்களை வசப்படுத்தி, வசூலைக் குவித்துள்ளது உண்மை.

மதுரைக்கார இயக்குநர்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பீட்ஸா படத்தின் மூலம்தான் அறிமுகமானார். ஆனால் அவர் முதலில் எழுதிய கதை இந்த மதுரைப் பின்னணி கொண்ட கதைதானாம். காரணம், அவர் அடிப்படையில் மதுரைக்காரர் என்பதால். இருப்பினும் முதலில் பீட்ஸாவைக் கொடுத்த அவர் தற்போது தனது மண்ணின் ஜிகர்தண்டாவை ஜில் ஜில்லென்று கொடுத்துள்ள வசூலை அள்ளிக் கொடுத்துள்ளார் இயக்குநருக்கு.


Click it and Unblock the Notifications











