Theatre release movies: இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: ஒவ்வொரு வாரமும் சினிமா பிரியர்களை குதூகலப்படுத்த வேண்டும் என்றே மூன்று அல்லது நான்கு படங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதுவும் இந்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதால் திரையரங்குக்கு படங்களை பார்க்க குவிவார்கள்.

இதையெல்லாம் டார்கெட் செய்துதான் இந்த வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமை பல பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

Jigarthanda 2, License movies releasing in theaters on friday

லைசன்ஸ்: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் லைசன்ஸ். இப்படத்தை கணபதி பாலமுருகன் இயக்கி உள்ளார். ஜேஆர்ஜி புரொடெக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ராதா ரவி, என். ஜீவானந்தம், விஜய் பாரத், பழ. கருப்பையா, அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் 3ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

Jigarthanda 2, License movies releasing in theaters on friday

ராரா சரசுக்கு ராரா: கேஷவ் தெபுர் இயக்கத்தில் லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து ரா..ரா.. சரசுக்கு ரா..ரா.. என்ற படம் உருவாகி இருக்கிறது. ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ள இத்திரைப்படம் நவம்பர் 3ம் தேதி திரைக்கு வருகின்றன. கேபிஒய் பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவி வர்மா, அபிஷேக், பெஞ்சமின் என பலர் நடித்துள்ளனர்.

கபில் ரிட்டன்ஸ்: கபில் ரிட்டன்ஸ் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் வையாபுரி, ரியாஸ் கான், சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். 14 வயதுடைய பரத் என்கிற இளைஞன் கிரிக்கெட் வீரராக ஆசைப்படுகிறார். ஆனால், அவனின் பெற்றோர் அவன் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதில் பரத்தின் கனவு என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

ரூல் நம்பர் 4: பாஸர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ரூல் நம்பர் 4. இப்படத்தில் ஏ.கே. பிரதீஸ் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக ஸ்ரீகோபிகா நடித்துள்ளார். மேலும், மோகன் வைத்யா, ஜீவா ரவி, கலா கல்யாணி, பிர்லா போஸ், கலா பிரதீப் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கருடன்: சுரேஷ் கோபி மற்றும் பிஜு மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கருடன் திரைப்படம் நவம்பர் 3ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. த்ரில்லர் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ள இத்திரைப்படத்தில் சுரேஷ் கோபி மற்றும் பிஜு மேனன் ஆகியோர் 12 வருடத்திற்கு பிறகு இணைந்துள்ளனர்.

Plot: பானு பாவ தாரா இயக்கத்தில் விகாஸ் மிப்பில்லா, காயத்ரி குப்தா, சந்தோஷ் நிவேதிதா நடிப்பில் உருவாகி Plot திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X