தயவு செய்து அதை மட்டும் செய்துவிடாதீர்கள்.. வேண்டுகோள் வைக்கும் ஜிகர்தண்டா 2 இயக்குநர்

சென்னை: Jigarthanda 2 (ஜிகர்தண்டா 2) ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கிறார்.

பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ் இரண்டாவது படமாக சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோரை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். மதுரையை கதைக்களமாக வைத்து தனது ஸ்டைலில் படத்தை கொடுத்திருந்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி கார்த்திக் சுப்புராஜை ட்ரெண்டாக்கியது. இரண்டே படங்களில் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத தனித்துவமான இயக்குநராகிவிட்டார் அவர்.

Jigarthanda 2 Movie Director Karthik Subbaraj Demands to Fans


ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: தற்போது அவர் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோரை வைத்து தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இது கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டைலில் தனித்துவமாக இருக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர்.

படம் இன்று ரிலீஸ்: இந்த சூழலில் படமானது இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் பாகம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருந்ததால் இந்தப் படம் எப்படி இருக்கும் என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்திருந்தது. அதனை அவர்களும் ஓபனாகவே சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.

பாசிட்டிவ்: ஜிகர்தண்டாவுடன் களமிறங்கிய கார்த்தியின் ஜப்பான் படத்தைவிட ஒரு படி மேலே இந்தப் படத்துக்கான பாசிட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. மேலும் கார்த்திக் சுப்புராஜின் மேக்கிங், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோரின் நடிப்பு என அனைத்தையுமே ரசிகர்கள் மனதார பாராட்டிவருகின்றனர். இதன் காரணமாக படக்குழு ஹேப்பி அண்ணாச்சி மூடில் இருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள்: இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ஜிகர்தண்டா 2 படம் தொடர்பாக ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கிறார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “யானையும் சினிமாவும் கடவுள் நமக்கு கொடுத்த சிறந்த பரிசு ஆகும். சினிமாவின் சக்தியையும் அதன் பார்வையாளர்கள் குறித்த எங்களின் மனப்பூர்வமான வெளிப்பாடுதான் இது.

இந்தப் படத்தை உருவாக்கும்போது நாங்கள் கொடுத்த அன்பை நீங்களும் கொடுப்பீர்கள் என்றே நம்புகிறேன். கிட்டத்தட்ட நான்கரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கி திரையரங்குகளில் வருவதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். படத்தில் இருக்கும் ஒரு சர்ப்ரைஸை தயவு செய்து யாரும் உடைத்துவிடாதீர்கள்” என்றார். அதேபோல்தான் பிரசாத் ஸ்டூடியோவில் செய்தியாளர்களை சந்தித்தபோதும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X