jigarthanda Double X Box Office: பாக்ஸ் ஆபிஸில் மாஸ்... ஜிகர்தண்டா டபுள் X முதல் நாள் வசூல்...

சென்னை: இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நேற்று வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா லீட் ரோலில் நடித்துள்ளனர்.

கார்த்தியின் ஜப்பானுக்கு போட்டியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

Jigarthanda Double X Box Office: Jigarthanda Double X has collected Rs. 1.75 crores on its first day

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதல் நாள் வசூல்
ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கேங்ஸ்டர், டைரக்டர் என ஜிகர்தண்டா படத்தின் அதே ஃபார்முலாவாக இருந்தாலும், கதையில் ரொம்பவே வித்தியாசம் காட்டியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். முதல் பாதியில் விறுவிறுப்பு இல்லையென்றாலும், இரண்டாம் பாதியில் கடைசி 40 நிமிடங்கள் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று வருகின்றன. அதேபோல், எஸ்ஜே சூர்யாவின் நடிப்பும் செம்ம மாஸ் வைப் கொடுத்துள்ளது.

இந்நிலையில், இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக கார்த்தியின் ஜப்பான் படத்துடன் களமிறங்கியது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஜப்பான் படத்துக்கு எதிர்பார்த்தளவிற்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சன ரீதியாக பாஸ் ஆகியுள்ளது. கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த ஜகமே தந்திரம், மகான் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தியேட்டரில் வெளியாகியுள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இதனால் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களிடமும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதல் நாளில் 2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது 1.75 கோடி கலெக்‌ஷன் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாளில் ஜப்பான் படத்தை விட ஜிகர்தண்டா வசூல் குறைவாக தான் உள்ளது. ஆனால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்க்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், வரும் நாட்களில் சிறப்பான சம்பவங்கள் காத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X