JIgarthanda Double X Review: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதல் விமர்சனம்.. யாரு சொல்லியிருக்கா பாருங்க!
சென்னை: JIgarthanda Double X Review - கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நவம்பர் 10ம் தேதியான இன்று வெளியாகிறது.
இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த படத்தை நேற்று இரவு பார்த்த நடிகர் தனுஷ் தனது முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: நாளைய இயக்குநர் நிகழ்ச்சி மூலமாக குறும்படங்களை இயக்கி அசத்தி வந்த கார்த்திக் சுப்புராஜ் பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா படம் நடிகர் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. தொடர்ந்து இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கிய படம் தியேட்டருக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

தனுஷ் விமர்சனம்: நவம்பர் 10ம் தேதி வெளியாக உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்த தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜின் இயக்கம் ரொம்பவே அருமையாக உள்ளது. எஸ்.ஜே. சூர்யா எப்படித்தான் இப்படி அசால்ட்டாக புதிய புதிய வெரைட்டி நடிப்பை வெளிப்படுத்துகிறாரோ தெரியவில்லை என்றும் ராகவா லாரன்ஸை புதிய அவதாரத்தில் பார்க்கலாம் என்றும் சந்தோஷ் நாராயணன் இசையையும் பாராட்டியுள்ள தனுஷ் படத்தின் கடைசி 40 நிமிடங்கள் நிச்சயம் உங்கள் இதயங்களை கொள்ளை கொள்ளும் என தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
தீபாவளி கிளாஷ்: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இன்று கார்த்தியின் ஜப்பான் மற்றும் விக்ரம் பிரபுவின் ரெய்டு உள்ளிட்ட படங்களுடன் மோதுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











