Jigarthanda 2 - தீபாவளி ரேஸில் ஜெயிச்சிடணும்.. திருப்பதிக்கு சென்ற ஜிகர்தண்டா 2 படக்குழு
சென்னை: Jigarthanda 2 (ஜிகர்தண்டா 2) ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் வெற்றி பெற வேண்டும் என வேண்டி படக்குழு திருப்பதி சென்றது.
நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அடையாளப்பட்டவர் கார்த்திக் சுப்பாராஜ். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அவர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசனை வைத்து பீட்சா என்ற படத்தை இயக்கினார். பேய் பட ஜானரில் வித்தியாசம் காண்பித்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகி முதல் படத்திலேயே பலரது கவனத்தை கார்த்திக் பக்கம் திருப்பியது.

ஜிகர்தண்டா: அதனைத் தொடர்ந்து சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோரை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். மதுரையை கதைக்களமாக வைத்து தனது ஸ்டைலில் படத்தை கொடுத்திருந்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி கார்த்திக் சுப்புராஜை ட்ரெண்டாக்கியது. இரண்டே படங்களில் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத தனித்துவமான இயக்குநராகிவிட்டார் அவர்.
ஃபேன் பாய் சம்பவம்: உச்சக்கட்டமாக ரஜினிகாந்த்தை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் பார்த்து பார்த்து பேட்ட படத்தை செதுக்கியிருந்தார். குறிப்பாக சிறு வயதில் தான் பார்த்து ரசித்த ரஜினிகாந்துக்கு ஒவ்வொரு ஃப்ரேமையும் அவ்வளவு அழகாக வைத்திருந்தார். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து அவர் இயக்கிய மெர்க்குரி ஃப்ளாப்பானது
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோரை வைத்து தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இது கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டைலில் தனித்துவமாக இருக்கும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகவிருக்கிறது.
இதற்கிடையே இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் முதல் கறுப்பு ஹீரோ வசனம், மேக்கிங் வீடியோ, மாமதுர பாடல் ஆகிய அனைத்துமே அதிரிபுதிரி ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதால் படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி சென்ற படக்குழு: இந்நிலையில் படம் நாளை வெளியாவதையொட்டி அனைத்தும் நல்லபடியாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினரான இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ், லாரன்ஸ் உள்ளிட்டோர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











