Jigarthanda XX: கொண்டாட்டத்தை சொல்லிய ஒய்யாரம் பாடல்.. லிரிக் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
சென்னை: நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 10ம் தேதி தீபாவளியையொட்டி வெளியாகியுள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இரண்டாவது பாகமாக வெளியாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.

வித்தியாசமான ஜானரில் ஆனால் கதைக்களத்தில் ஒற்றுமையுடன் இந்தப் படம் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ஜிகர்தண்டா XX படம்: நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜிகர்தண்டா XX படம் கடந்த 10ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகமாக ஜிகர்தண்டா XX வெளியாகியுள்ளது.
தீபாவளி ரிலீஸ்: கார்த்தியின் ஜப்பான் படத்துடன் ஜிகர்தண்டா XX தீபாவளி ரேஸில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் ஜிகர்தண்டா XX படத்திற்கு ரசிகர்கள் அதிகமான வரவேற்பை கொடுத்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. மேலும் வழக்கம்போல எஸ்ஜே சூர்யா படத்தில் அதிகமாக ஸ்கோர் செய்கிறார். ராகவா லாரன்சும் தனக்குள் இருக்கும் நடிகருக்கு இந்தப் படத்தில் அதிகமாக வேலை கொடுத்துள்ளார். படத்தில் அவரது நடிப்புடன் நடனமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
பழங்குடியின மக்களின் வாழ்க்கை: படத்தின் பாடல்களில் சில பழங்குடியின மக்களின் வாழ்க்கையை சொல்வதாகவும் அமைந்துள்ளது. மேலும் படம் 1973ஐ ஒட்டிய காலகட்டத்தில் பயணிக்கிறது. அதற்கேற்ப தன்னுடைய இசையை செம்மையாக்கியுள்ளார் சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்தின் ஒய்யாரம் பாடல், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை அவர்களின் சந்தோஷங்களை பகிர்வதாக அமைந்துள்ளது. இந்தப்படத்திற்காக மலைக்கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களையே அதிகமாக நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
ஒய்யாரம் பாடல்: அந்த வகையில் இந்த ஒய்யாரம் பாடலுக்கு, அந்த மக்களே அதிகமாக நடனமும் ஆடியுள்ளனர். சில குரூப் டான்சர்களை மட்டுமே இந்தப் பாடலில் இணைத்துள்ளனர் டான்ஸ் மாஸ்டர்கள் ஷெரீப் மற்றும் பாபா பாஸ்கர். ஒய்யாரம் பாடலின் வரிகளை விவேக் மற்றும் முத்தமிழ் இணைந்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த இந்தப் பாடல் தற்போது லிரிக் வீடியோவாக படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
லிரிக் வீடியோவை வெளியிட்ட படக்குழு: லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ள போதிலும் ஒய்யாரம் பாடலின் ஃபீல் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. காட்டையும் அதன் முக்கியத்துவத்தையும் அங்கேயே பிறந்து, அங்கேயே தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ளும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் கொண்டாட்டங்களையும் இந்தப் பாடல் ரசிகர்களுக்கு கடத்துகிறது. படத்தின் க்ளைமாக்சிற்கு முந்தைய இந்தப் பாடல் வலிக்கு முன்னதாக கிடைக்கும் சந்தோஷத்தை ரசிகர்களுக்கு சொல்லும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











