Jigarthanda Double X: ஜிகர்தண்டா டபுள் X ப்ரொமோஷன்... SJ சூர்யா, ராகவா லாரன்ஸ் சந்தித்த பிரபலம்!!
கோவை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நாளை ரிலீஸாகிறது.
SJ சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கோவையில் நடைபெற்ற ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், SJ சூர்யா, ராகவா லாரன்ஸ் இருவரும் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியை சந்தித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
மம்முட்டியுடன் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ்
ரகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நாளை ரிலீஸாகிறது. ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸுடன் மலையாள நட்சத்திரங்கள் சைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். ப்ளாக் காமெடி, கேங்ஸ்டர், ஆக்ஷன் என வெரைட்டியான ஜானரில் உருவாகியுள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். அதேநேரம் தீபாவளிக்கு கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தீபாவளிக்கு ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களுக்கு இடையே தான் கடும் போட்டி காணப்படுகிறது. இதனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இருவரும் கோவை சென்றிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியை சந்தித்துள்ளனர்.
அப்போது மம்முட்டியுடன் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. மம்முட்டி, எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் மூவரும் செம்ம கேஷுவலாக போஸ் கொடுத்துள்ளனர். மம்முட்டி நடித்து வரும் டர்போ படத்தின் ஷூட்டிங் கோவையில் நடைபெற்று வருகிறது. அதற்காக சில நாட்களாகவே மம்முட்டி கோவையில் தான் தங்கியுள்ளார்.
மம்முட்டியின் மகனும் முன்னணி நடிகருமான துல்கர் சல்மான், கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ளார். அதேபோல் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார். ஒருகாலத்தில் மம்முட்டி தமிழில் மாஸ் காட்டியதை போல, தற்போது துல்கர் சல்மான் அதிரடி காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











