Jigarthanda double X FDFS: வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் படம்பார்த்த ஜிகர்தண்டா டபுள் X டீம்!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் X படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதில் பாபி சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தையும் இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். படத்திற்கு சந்தோஷ் நாராயணனன் இசை கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

Jigarthanda double X team watched FDFS in Vetri theatres with fans


ஜிகர்தண்டா படம்: நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. பாபி சிம்ஹாவிற்கு இந்தப் படம் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்: முதல் பாகம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாகத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தீபாவளியையொட்டி வெளியான இந்த திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கும் அரசு அனுமதி கிடைத்துள்ள நிலையில், படம் அழுத்தமான கதைக்களத்துடன் ரசிகர்களை சந்தித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரையும் கார்த்திக் சுப்புராஜ் சிறப்பாக பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த இடைவேளை காட்சிகள்: இடைவேளை காட்சிகள் மிகவும் அதிகமாக ரசிகர்களை கவர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு போட்டியாக தீபாவளி ரேஸில் கார்த்தியின் ஜப்பான் படமும் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்கள் வெளியான நிலையில் சர்தார் படம்தான் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் தற்போது ராகவா லாரன்சுடன் கார்த்தி மோதியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் உற்சாகம்: இந்நிலையில் இந்த தீபாவளி ரேசில் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்தான் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் அசால்ட் சேதுவாக நடிக்க கிடைத்த சான்சை தவறவிட்டிருந்தார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் அதே போன்றதொரு கேரக்டரில் தற்போது அவர் இரண்டாவது பாகத்தில் நடித்துள்ள நிலையில் தன்னுடைய பேய் பட இமேஜ் இந்தப் படத்தின்மூலம் உடையும் என்றும் அவர் முன்னதாக கூறியுள்ளார்.

ரசிகர்களுடன் படம் பார்த்த டீம்: முன்னதாக இந்தப் படத்தின் கருப்பு ஹீரோ கேரக்டரை ரஜினிகாந்தை மனதில் வைத்துதான் தான் உருவாக்கியதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உளளிட்டவர்கள் இந்தப் படத்தை சென்னை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் சென்று பார்த்து மகிழ்ந்துள்ளனர். முன்னதாக அவர்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X