Jigarthanda Double X - பட்டையை கிளப்பும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீசர்.. வெயிட்டான சம்பவம் காத்திருக்கு

சென்னை: Jigarthanda Double X Teaser (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீசர்) கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜிகர்தண்டா டபுஸ்ல் எக்ஸ் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அடையாளப்பட்டவர் கார்த்திக் சுப்புராஜ். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அவர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசனை வைத்து பீட்சா என்ற படத்தை இயக்கினார். பேய் பட ஜானரில் வித்தியாசம் காண்பித்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகி முதல் படத்திலேயே பலரது கவனத்தை கார்த்திக் பக்கம் திருப்பியது.

Jigarthanda Double X Teaser Was out now

ஜிகர்தண்டா: அதனைத் தொடர்ந்து சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோரை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். மதுரையை கதைக்களமாக வைத்து தனது ஸ்டைலில் படத்தை கொடுத்திருந்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி கார்த்திக் சுப்புராஜை ட்ரெண்டாக்கியது. இரண்டே படங்களில் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத தனித்துவமான இயக்குநராகிவிட்டார் அவர்.

ஃபேன் பாய் சம்பவம்: உச்சக்கட்டமாக ரஜினிகாந்த்தை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் பார்த்து பார்த்து பேட்ட படத்தை செதுக்கியிருந்தார். குறிப்பாக சிறு வயதில் தான் பார்த்து ரசித்த ரஜினிகாந்துக்கு ஒவ்வொரு ஃப்ரேமையும் அவ்வளவு அழகாக வைத்திருந்தார். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து அவர் இயக்கிய மெர்க்குரி ஃப்ளாப்பானது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாக வேலையில் பிஸியாக இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோரை வைத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உருவாகியிருக்கிறது. படத்தின் அறிவிப்போடு வெளியான டீசரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இதனை வித்தியாசமான முறையில் கார்த்திக் சுப்புராஜ் ப்ரெசண்ட் செய்வார் என கூறினர். படமானது தீபாவளிக்கு வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

ஜிகர்தண்டா 2 டீசர்: இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. முழுக்க முழுக்க ரெட்ரோ காலத்தில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. டீசரை பார்க்கும்போது எஸ்.ஜே.சூர்யா இயக்குநராகவும், லாரன்ஸ் கேங்ஸ்டராகவும் நடிக்கிறார் என்பது தெரியவருகிறது. மேலும் முதல் பாகத்தில் எப்படி பாபி சிம்ஹா சினிமாவில் நடிப்பாரோ அதேபோல் இதிலும் லாரன்ஸை வைத்து எஸ்.ஜே.சூர்யா சினிமா இயக்குவது போலவும் அதிலிருந்து விரியும் பிரச்னைகள்தான் கதையாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். இந்த டீசரை தனுஷ் வெளியிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X