Jigarthanda DoubleX: "தமிழ் சினிமாவில் முதல் கறுப்பு ஹீரோ..” வெளியானது ஜிகர்தண்டா டபுள் X ட்ரெய்லர்
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு ரிலீஸான ஜிகர்தண்டா சூப்பர் ஹிட்டானது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா டபுள் X தற்போது உருவாகியுள்ளது.
ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
இதனையடுத்து ஜிகர்தண்டா டபுள் X ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெளியானது ஜிகர்தண்டா டபுள் X ட்ரெய்லர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் X படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பீரியட் ஜானரில் ஆக்ஷன் ப்ளஸ் டார்க் காமெடி படமாக ஜிகர்தண்டா டபுள்X உருவாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா, ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அட்டகாசமான டார்க் காமெடி ஜானரில் செம்மையான ஆக்ஷன் ட்ரீட் கொடுத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இப்படத்திற்காக பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்தப் படத்தின் தொடர்ச்சியாக ஜிகர்தண்டா டபுள் X உருவாகியுள்ளது. எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் காம்போவில் ஜிகர்தண்டா டபுள் X மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. 1975ம் ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் பீரியட் ஜானர் படமாக இது உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா இயக்குநராகவும் ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோவும் இணைந்துள்ளது, படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ட்ரெய்லரை பார்க்கும் போது படத்தின் மேக்கிங் தரமாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சந்தேஷ் நாராயணின் பின்னணி இசையும் தெறிக்கவிட்டுள்ளது.
முதல் பாகத்தை போலவே ஜிகர்தண்டா டபுள் X-ம் மதுரை மண்ணின் கேங்ஸ்டர் கதை என்பதும் இந்த ட்ரெய்லரில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வரும் 10ம் தேதி வெளியாகும் ஜிகர்தண்டா டபுள் X, பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தப் படத்துடன் கார்த்தியின் ஜப்பானும் வரும் 10ம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications