twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜிகர்தண்டா விவகாரம்: சித்தார்த்துக்கு சரத்குமார் ஆதரவு!!

    By Mayura Akilan
    |

    நாகர்கோவில்: ஒரு திரைப்படம் வெளிவரவேண்டும் என்பதில் அதில் நடித்த நடிகருக்கும் அக்கறை உள்ளது என்று நடிகர் சங்கத்தலைவரும். சமக எம்.எல்.ஏவுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    ஜிகர்தண்டா படம் கடந்த 25ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. திடீர் என்று ஆகஸ்ட் 1 ம் தேதிதான் படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் கதிரேசன் அறிவித்தார். அதற்கு காரணமும் சொல்லியிருந்தார்.

    Jigarthanda issue: Sarathkumar supports actor Siddharth

    ஆனால், எங்களிடம் கேட்காமல் எப்படி தேதியை தள்ளிவைக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் குமுறியிருந்தார். இதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    சம்பளம் வாங்கிக்கொடுக்கும் நடிக்கும் சித்தார்த் பட ரிலீசை பற்றி கவலைப்பட தேவையில்லை. ரிலீஸ் என்பது பணத்தை கொட்டி முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளரின் முடிவு என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

    சரத்குமார் ஆதரவு

    இதையடுத்து நடிகர் சங்க தலைவர் சரத்குமார், சித்தார்த்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். அவர் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ''ஒரு சினிமா வெளி வருவதில் அதில் நடித்த நடிகருக்கும் அக்கறை உள்ளது. ஜிகர்தண்டா பட விவகாரத்தில் அந்த படம் வெளி வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நடிகர் சித்தார்த் பேசி உள்ளார். தயாரிப்பாளர் இப்பிரச்சினையை பெரிதாக்கி இருக்க வேண்டாம்''என்று கூறினார்.

    சட்டப்பேரவை பிரச்சினை

    நடிகர் சங்கத்தலைவராக கருத்து கூறிய சரத்குமார், சமக எம்.எல்.ஏவாக சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றியும் செய்தியாளர்களிடம் பேசினார்.

    சிறப்பான ஆட்சி

    அ.தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்கள். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தீட்டி வருகிறார்.

    மீனவர் நலனில் அக்கறை

    கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினார். மீனவர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டு அவர் செயல்பட்டு வருகிறார்.

    திமுகவினர் நிறைவேற்றினார்களா?

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தபின்னரும் பிரச்சினையை கிளப்பி வருகிறார்கள். அனுமதிக்கப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசுவதற்கு பதில் அனுமதிக்கப்படாத கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்து பேசுகிறார்கள். தி.மு.க.வினர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் செயல்படுகிறார்கள்.

    குறைந்து வரும் செல்வாக்கு

    தமிழகத்தில் தற்போது தி.மு.க., தே.மு.தி.க.வுக்கு செல்வாக்கு கிடையாது. இப்போது அவர்கள் இருக்கும் செல்வாக்கையும் இழந்து வருகிறார்கள் என்றார் சரத்குமார்.

    English summary
    SMK leader and South Indian film actors association president SarathKumar support to actor Siddarth in Jigarthanda movie issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X